நுங்கம்பாக்கம் பாரில் இருந்து ஸ்ரீகாந்த்தை துரத்திய எமன்.. விசாரணை வலையத்திற்குள் மற்றொரு நடிகர்

கடந்த மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்ட்ரோ பாரில் அடிதடி சண்டை ஏற்பட்டது. போலீஸ் வரை சென்ற அந்த பிரச்சனையில் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரசாத் என்பவருக்கு போதைப்பொருள் ஆசாமியுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர் பெங்களூரில் பிரவீன் என்றவரிடமிருந்து இந்த போதை மருந்தை வாங்கியுள்ளார். பிரவீனுக்கு நைஜீரியாவிலிருந்து இந்த போதை பொருளை ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார்.

நுங்கம்பாக்கம் பாரில் சண்டையிட்ட வழக்கில் போலீசில் மாட்டிக்கொண்ட பிரசாத்திற்கும் நடிகர் ஸ்ரீகாந்திருக்கும் நட்பு இருந்து வந்துள்ளது. இந்த பிரசாத், ஸ்ரீகாந்தை வைத்து தீங்கிறை என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளார். அதன் காரணமாக இவர்களுக்குள் நல்ல பழக்கமும் இருந்து வந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஸ்ரீகாந்த் சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வங்கி பரிவர்த்தனை செய்துள்ளார். இதனை விசாரிக்கும் பொழுது அவர் போதைப்பொருள் வாங்குவதற்காக இந்த பணத்தை அனுப்பி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

ஸ்ரீகாந்த் உடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும் இந்த கும்பலுடன் நட்பாய் இருக்கும் மற்றொரு நடிகர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா. இப்பொழுது இவரும் இந்த விசாரணைக்குள் சீக்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →