வாக்கு வங்கியை உடைக்கும் TVK விஜய்.. சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த ராஜேந்திர பாலாஜி

Vijay : “தமிழக வெற்றி கழகம்” கட்சியை நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்ததிலிருந்தே இன்று வரையில் அனைவருக்கும் இருக்கும் சந்தேகம். தேர்தலில் தனித்து போட்டியிட போகிறாரா அல்லது கூட்டணி கட்சியாய் சேர்ந்து போட்டியிட போகிறாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்து வருகிறது.

ஆனால் இன்று வரையில் கூட்டணி சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பையும் நடிகர் விஜய் அவர்கள் வெளியிடவில்லை. மேலும் சாதாரண ஒரு கருத்துக்கணிப்பில் விஜய் தனித்து போயிட்டாலே ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஒரு கூட்டம் கூறிவருகிறது.

இன்னொரு பக்கம் கூட்டணி அமைத்தால் ஈசியாக ஆட்சி அமைத்து விடலாம் என ஒரு கூட்டம் கூறி வருகிறது. ஆனால் நடிகர் விஜய் அவர்கள் இது எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் தன் இலட்சியத்தை நோக்கி அடுத்தடுத்த நகர்வை முன்வைத்து செல்கிறார்.

இவ்வாறிருக்க அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஒரு நேர்காணலில் விஜய் அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது “தமிழக வெற்றி கழகம்” தேர்தலை சந்தித்தால் அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கள் கலைக்கப்படும் எனவும் அதில் அதிமுகவை விட திமுகவிற்கே பெரிய இழப்பு எனவும் கூறியுள்ளார்.

விஜய் கூட்டணிக்கு- ADMK ரெடி..

அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டாலும் அதிமுகவை விட திமுகவிற்கு ஓட்டுகள் குறைவாக விழும் எனவும், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டாலும் அதிலும் திமுகவிற்கே இழப்புகள் அதிகம் எனவும் கூறியுள்ளார்.

பிறகு நடிகர் விஜய் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எங்களைப் போன்ற அமைச்சர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கின்றோம் மற்றும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அவர்கள் புதிதாக களமிறங்கிய அரசியல்வாதி போல் இல்லாமல் அரசியலை நன்று பழகியவர்கள் போலத்தான் அவரது செயலும் பேச்சும் இருக்கிறது.

அரசியல் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் சாதாரணமான மனிதனாகவும் அவர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறார், என நடிகர் விஜய் அவர்களை புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

நடிகர் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து, வரப்போகும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போகிறாரா அல்லது கூட்டணி போட்டு போட்டியிட போகிறாரா என்பது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி கூட்டணி போட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி போடுவார் என்பதும் கணிப்பது போல இல்லை. ஆனால் எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமலும் மற்றும் அலட்டிக்கொள்ளாமல் அரசியல் களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் நடிகர் விஜய் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.