நினைத்த மாதிரி இல்லாத வெங்கட் பிரபு மீது ஏஜிஎஸ் காட்டிய வெறுப்பு.. கோட்டுக்கு பின் ஆனா கெட் அவுட்

கோட் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவை கெட்ட காலம் பிடித்து ஆட்டி வருகிறது. மனுஷன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் படம் பண்ணுவதற்கு காத்துக் கொண்டு இருக்கிறார் என கூறி வருகிறார்கள், ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இப்பொழுது சிம்புவை வைத்து மாநாடு இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார். இதுதான் STR-50 என கூறி வந்தனர், ஆனால் அந்த படத்திற்கு ஏற்கனவே சிம்பு தேசிங்கு பெரிய சாமியை ஒதுக்கி விட்டார். இப்பொழுது மாநாடு இரண்டாம் பாகம் டேக் ஆன் ஆகிறது.

ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் ஏ சி எஸ் நிறுவனத்திற்கும் வாய்க்கால் தகராறு ஏற்பட்டதால். மீண்டும் அவர்கள் கூட்டணியில் மற்றொரு படம் எடுபடாது என்று தெரிகிறது. இதனால் மாநாடு முதல் பாகத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

கோட் பட நேரத்தில் வெங்கட் பிரபு மீது ஏஜிஎஸ் அதிருப்தியில் இருந்துள்ளது. அதனால்தான் அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எதற்கும் அவரை அழைக்கவில்லை. படத்தின் சக்சஸ் மீட்டிற்கு கேக் வெற்றிய நிகழ்ச்சியில் கூட அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் கோட் படத்திற்கு 400 கோடிகள் பட்ஜெட் ஒதுக்கி உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் ஆனால் வெங்கட் பிரபு அதையும் தாண்டி ஏகப்பட்ட பில் போட்டிருக்கிறார். இதனால் தான் அந்த நிறுவனம் இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. எதிர்பார்த்த அளவு கோட் படமும் வசூலை பெற்று தரவில்லை.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →