ஸ்ரீகாந்த் அளித்த பரபரப்பான வாக்குமூலம்.. எத்தனை வருட ஜெயில் தண்டனை தெரியுமா?

Srikanth : சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அனைத்து உள்ளங்களிலும் இடம் பிடித்த நடிகர் ஸ்ரீகாந்த் இன்று போ**தப் பொருள் அடிமை என்ற பெயரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.

நடந்தது இது தான்

பிரசாந்த் என்பவர் போ**த பொருள் பயன்படுத்தி போலீசில் மாட்டிய நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இடம் தான் இந்த கொக்**கைனை வாங்கினேன் என்று கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், நடிகர் ஸ்ரீகாந்த்தை நேரில் வர வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தினர். சிறிது நேரம் கழித்து மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போ**த பழக்கமுடையவர் என்று உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னணி என்ன..??

இதை விடாமல் மேலும் விசாரணை செய்த போலீஸ் :

விசாரணையில் ஸ்ரீகாந்தின் Google pay -இல் இருந்து கிட்டத்தட்ட ₹4.72 லட்சம் செலவழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது NDPS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட காவலில் அடைக்கப்பட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய வாக்குமூலம்..

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் 250 கிராம் கொக்**ன் பாக்கெட்டுகள் வாங்கினேன். அந்த கொக்**னை வைத்து தான் கடந்த சனிக்கிழமை வீட்டில் பார்ட்டி நடத்தினேன்.

பிரசாந்த் என்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்கு சேர வேண்டிய 10 லட்ச ரூபாயை கேட்டபோதுதான் இந்த கொக்**னை கொடுத்து பழக்கினார். நான் பணம் கேட்கும் போதெல்லாம் இந்த கொக்**னை கொடுத்தது அவர்தான், அதன் மூலம் தான் இந்த பழக்கம் அதிகமானது – ஸ்ரீகாந்த்.

10 வருட தண்டனை!

நடிகர் ஸ்ரீகாந்த் மீது போ**தப் பொருள் உட்கொள்ளல் மற்றும் வைத்திருத்தல் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. NDPS சட்டத்தின் படி இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →