விஜய் பின்னால் சூரியன் மறைகிறது.. பெருசா ஏதோ சம்பவம் பண்ணுறீங்க விஜய் சார்

Vijay : நடிகர் விஜய் அவர்கள் “தமிழக வெற்றி கழகம்”கட்சி ஆரம்பித்து தற்போது நன்றாக முறையில் கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்தவர் போல் இல்லாமல் நன்றாக அரசியல் பழகியவர்கள் போல் நடந்து கொள்கிறார் என அனைவருக்கும் தெரிந்ததே.

இவ்வாறு அவர் அடுத்தடுத்து வைக்கும் அடிகளில் மிகவும் கவனமாக கட்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார். கட்சி ஆரம்பித்து நடித்து வெளிவரவிற்கும் படம், மற்றும் விஜய் அவர்களின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் இவர் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்வைத்து படத்தில் நடுத்திருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனநாயகன் “1ஸ்ட் Roar” அப்டேட் விஜய் பிறந்த நாளான அன்று வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மேலும் ஜனநாயகன் படம் அரசியல் கதைகளை உள் வைத்து உருவாகி இருப்பதையும் நாம் அறிந்ததே. இதற்கு அடுத்ததாக நம் தளபதி ஹிட்டன் டீடைல்ஸ் நிறைய ஒளித்து வைத்திருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

பெருசா எதோ சம்பவம் பண்ட்ரீங்க விஜய் சார்…

அதற்கு அச்சாரமாக அதாவது ஜனநாயகன் படத்தின் “1ஸ்ட் Roar” போஸ்டரில் விஜயின் கை மேலே ஓங்கி இருப்பதை போலவும் பின்னால் சூரியன் மறைவதை போலவும் உள்ளது. இதை எதை உள்நோக்கமாகக் கொண்டு விஜய் வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. பின்னால் சூரியன் மறைவது போன்ற காட்சி திமுகவை குறிக்கிறதா, அல்லது எந்த உள்நோக்கத்தின் அடிப்படையிலும் வைக்கப்படவில்லையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஆனால் நம் தளபதி விஜய் அவர்கள் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் செய்யக்கூடிய ஒரு மனிதர். ஒருவேளை அந்த மாதிரியான அர்த்தங்களையும் உள் வைத்து தான் இந்த போஸ்டரை தயாரித்திருப்பார்களா. 2026 தேர்தல் களத்தை நோக்கி இந்த போஸ்டரை தயாரித்து இருப்பார்களா. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த போஸ்டர்.

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நன்றாகத்தான் இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் மிக முக்கியமான தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பின்னால் மறைகிற சூரியன், பெருசா ஏதோ சம்பவம் பண்ண காத்திருக்கிறார்,“தமிழக வெற்றிக் கழகத்தின்” தலைவர் விஜய் என்பது நன்றாகவே புரிகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →