Gossip: பூ பெயர் கொண்ட படத்தின் மூலம் அறிமுகமான சாக்லேட் பாய் ஹீரோ ஒருவர் தவறான பழக்க வழக்கத்தின் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சினிமாவில் இந்த கலாச்சாரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.
சினிமா வட்டாரத்திலேயே இந்த நடிகர் மாட்டிக் கொண்டதற்கு ஒரு சிலர் தங்களுடைய பரிதாபத்தை தெரிவித்திருக்கிறார்கள். குறைவான அளவில் அந்த நடிகர் போ…தை பொருள் வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.
மேலும் அவர் மீது கடத்தல் வழக்குகள் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த ஹீரோ தான் இப்போது மீடியாவின் மிகப்பெரிய டார்கெட். இந்த நடிகரா இப்படி என்று ஆச்சரியப்படும் அதே நேரத்தில் எதற்காக இந்த நடிகர் இந்த வளையத்தில் மாட்டினார் என்று தெரிய வந்திருக்கிறது.
அதாவது நடிகரை மாட்டி விட்டவர் பெரிய அரசியல் கட்சியின் முக்கிய புள்ளி. அந்த அரசியல் கட்சி தற்போது போ…தை பொருள் ஒழிப்பை தான் தங்களுடைய பிரச்சாரமாக எடுத்து முன் வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த கட்சியை சேர்ந்த பெரும்புள்ளி இந்த விஷயத்தில் மாட்டியிருக்கிறார்.
எனவே தான் அவருடைய லிஸ்டில் ஒரு நடிகர் வந்ததும் அப்படியே ஒட்டுமொத்த வழக்கையும் திசை திருப்ப நடிகரின் பெயரை பெரிய அளவில் பேசும் பொருளாக மாற்றி இருப்பதாக சினிமா வட்டாரம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.