லோகேஷ் கனகராஜ் – சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது கூலி. ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு பணமழை கொட்டி வருகிறது அதுவும் ரிலீசுக்கு முன்னரே.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக 1000 கோடி வசூலை கெத்தாக தொடும் கூட்டணி இதுவாக தான் இருக்க முடியும். ஓவர்சீஸ் பிசினஸ் 75 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் 42 கோடி, கேரளா மற்றும் கர்நாடகா டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் 20 கோடி.
நார்த் இந்தியாவில் கிட்டத்தட்ட 50 கோடிக்கு வியாபாரம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமீர்கான் இந்த படத்தில் நடித்துள்ளது தான். இதைத் தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் 100-ல் இருந்து 120 கோடி வரை டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் வாங்கி சாதனை படைத்துள்ளது கூலி.
இது மட்டுமே கிட்டதட்ட 300 கோடி வியாபாரம் ஆகி உள்ளது. இதற்குப் பின் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 120 கோடி கொடுத்து கூலி படத்தை வாங்கியுள்ளது. சன் நெட்வொர்க் சேட்டிலைட் உரிமைத்தை தட்டி தூக்கி உள்ளது.
மொத்தமாக கூட்டி கழிச்சு பார்த்தால் 500 கோடி ரிலீசுக்கு முன்னரே வசூல் செய்துள்ளது கூலி. இதனால் லோகேஷ் ரஜினி கூட்டணி முதல்முறையாக தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூலை தாண்டும் இன்று எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. லோகேஷ் வெற்றி இயக்குனர் என்ற நம்பிக்கையில் ரஜினி மலைபோல் நம்பியுள்ளார்.
விஜய், அஜித் இல்லாத இடத்தையும் தலைவர் ரஜினி நிரப்பியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கோலிவுட் வட்டாரம் இருக்கிறது. இதனால் இந்த காம்போ அசுர பலத்தில் உலகளவில் வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.