Forgotten : “Forgotten” என்ற கொரியன் படம் தற்போது வெளியாகி நெட் ஃப்லிக்ஸ்-ல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்த அனைவருக்கும் “படத்துக்குள்ள ட்விஸ்ட் இருக்கலாம் இது என்னடா ட்விஸ்ட்டா படமாக இருக்கு” என்று ஆச்சரியமாக கேட்கும் அளவிற்கு தற்போது இந்த படம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பொதுவாக படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ட்விஸ்ட் இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ட்விஸ்ட்.
இந்த படத்தின் ஹீரோ அவரது குடும்பத்தோடு வேறொரு வீட்டிற்கு செல்கிறார். வீட்டை பார்த்ததும் ஹீரோவிற்கு இந்த வீட்டை ஏற்கனவே பார்த்தது போல தோணுகிறது. இந்த ஹீரோவிற்கு அண்ணன் என்றால் அவ்வளவு பிடிக்கும் அண்ணன் கால் தாங்கி தாங்கி நடப்பார்.
பிறகு அனைவரும் வீட்டுக்குள்ளே சென்று சாப்பிடுகின்றனர் ஹீரோவிற்கு மட்டும் மேலே உள்ள அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது அதை ஹீரோவின் குடும்பம் வெளியில் மழை பெய்கிறது அதனால் இடி இடிக்கிறது என்று சமாளிக்கிறது.
அதற்கடுத்து ஹீரோவும் ஹீரோவின் அண்ணனும் ஒரே அறையை ஷேர் செய்கின்றனர். இந்த படத்தில் ஹீரோ மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவராக தொடர்ந்து மாத்திரையை எடுத்துக்கொள்ளும் ஒரு நபர்.
அந்த வீட்டிற்கு சென்றதில் இருந்தே ஹீரோவிற்கு அடிக்கடி கனவு வருகிறது அந்த கனவில் யாரோ யாரையோ போட்டு அடிப்பது போல தெரிகிறது. அந்த வீட்டில் பயன்படுத்தாத ஒரு அறை ஒன்று இருக்கிறது அந்த அறையில் அடிக்கடி சத்தம் வருகிறது.
பிறகு திடீரென அண்ணனை ஒரு கும்பல் கடத்தி செல்கிறது. இதை பார்த்த அந்த கார் நம்பர் கூறியும் அண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. திடீரென்று 19 நாட்கள் கழித்து அண்ணனை கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். கால் தாங்கி நடந்த அண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் சரியாக நடக்கிறான்.
பிறகு அண்ணன் இரவு தனியே சென்று போலீசார் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த போலீஸ் அண்ணனை கண்டறிய வீட்டிற்கு வந்த போலீஸ் என ஹீரோவுக்கு தெரிய வருகிறது. இதை உடனே அம்மாவிடம் சென்று சொல்கிறார் ஹீரோ.
சிறிது நேரம் அம்மா யாருடனோ தொலைபேசியில் பேசுவதை கண்டறிந்த ஹீரோ என்ன பேசுகிறார்கள் என்று கேட்கிறான். ஹீரோவின் அம்மா யாரோ ஒருவரிடம் அவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்று கூறுகிறார். இப்போது ஹீரோவிற்கு தன் அம்மாவும்,அண்ணனும் ஏதோ செய்கிறார்கள் என புரிகிறது.
உடனே அந்த வீட்டை விட்டு தப்பித்து செல்வதற்காக புறப்படுகிறான், வழியில் அப்பா நிற்கிறார், ஹீரோவின் பின்னாடி அம்மாவும் நிற்கிறார் ஆக ஒட்டு மொத்த குடும்பமும் அவருக்கு எதிராக இருப்பதை அறிந்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைகிறான்.
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
அங்கு போலீசும் இவரை கட்டி வைத்து அடித்து ஏன் அந்த கொலையை செய்தாய் என்று கேட்கிறார்கள் இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு மருத்துவர் அழைக்கிறார்கள் ஹீரோவின் அப்பா வருகிறார், ஹீரோவிற்கு பழைய நினைவுகளை வரவைத்து உண்மையை அறிகின்றனர்.
ஹீரோ 20 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்து அனைவரும் இறந்து விடுகின்றனர். அண்ணன் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தருவாயில் அவன் உயிரை காப்பாற்ற ஒரு கொலையை செய்கிறான் ஹீரோ.
அந்த கொலையை செய்யக் கூறியவர் ஹீரோவின் அப்பா, ஹீரோ அனைவரையும் கொன்றுவிட்டு ஒரு சிறு பையனை மட்டும் உயிரோடு விட்டுவிடுவார்.ஹீரோ செய்த கொலையை விசாரிப்பவர் ஹீரோ கொல்லாமல் விட்டு சென்ற சிறு வயது பையன். எதற்காக அந்த கொலையை ஹீரோ செய்தான், ஏன் அந்த கொலையை டாக்டர் செய்யசொன்னார்.
குடும்பம் எனக்கூறி ஏன் அந்த நபர்கள் ஹீரோவை ஏமாற்றினார்கள். இவ்வாறு ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இந்த படத்தில் காத்திருக்கிறது அனைவரும் நெட் ஃப்லிக்ஸ் -ல் இந்த தரமான படத்தை கண்டு மகிழுங்கள்.