பேண்டஸி, கருத்து படம் எல்லாம் வேலைக்கு ஆகாது.. #suriya46-ல் பழைய ரூட்டை கையில் எடுக்கும் சூர்யா

Suriya: சூர்யாவின் அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் வெற்றி படங்கள் என்று எதுவும் இல்லை.

அதிலும் கடைசியாக வெளியான கங்குவா படம் அவர் எதிர்பார்க்காத அளவிற்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்தது. தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் கருப்பன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கை.

பழைய ரூட்டை கையில் எடுக்கும் சூர்யா

இதைத் தாண்டி ஆவேசம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 46வது படத்தில் இணைகிறார். ஆவேசம் படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

சூர்யா சமீப காலமாக கருத்துக்கள் அதிகம் இருக்கும் படங்கள், பேண்டஸி படங்கள் என்றுதான் கவனம் செலுத்தினார். தற்போது வெற்றிக்காக பழைய ரூட்டுக்கு வந்திருக்கிறார். சூர்யாவுக்கு கேரியர் பிரேக்காக அமைந்த படங்கள் என்றால் காக்க காக்க மற்றும் சிங்கம் படங்களை சொல்லலாம்.

இரண்டு படத்தில் உள்ள வித்தியாசமான போலீஸ் கேரக்டர் அவருக்கு. இந்த லிஸ்ட் உடன் தற்போது புது போலீஸ் கேரக்டர் இணைய இருக்கிறது. சூர்யா தன்னுடைய 46 வது படத்தில் போலீஸ்காரராக நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →