Coolie-Chikitu Vibe: ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் நடித்துள்ள கூலி படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
லோகேஷ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான இப்பாடலின் கிளிம்ஸ் இப்போது வரை வைப் ஏத்துகிறது. ஆனாலும் பாடலை முழுதாக கேட்கவும் பார்க்கவும் ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
அதன்படி தற்போது பாடலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதாவது ஆரம்பத்திலேயே அனிருத் தலைவருக்காக வைப் ஏத்தணும் என சொல்கிறார்.
வைப் ஏத்தியதா தலைவரின் சிக்கிடு.?
அதைத்தொடர்ந்து டி ஆர் பாடுவது மட்டுமல்லாமல் ஆட்டமும் போட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்த வயசிலும் மனுஷன் பல திறமையை வைத்துக் கொண்டு இப்படி அசத்துறாரே என்ற ஆச்சரியம் தான்.
பாடல் முழுவதும் டி ஆர், அனிருத் ஆட்டம் அட்டகாசமாக இருக்கிறது. அதேபோல் இடையில் சாண்டி மாஸ்டர் வந்து கலக்கல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறார். ஆனால் எங்கடா தலைவர காணோம் என கேட்கும் நிலைதான்.
அந்த அளவுக்கு தலைவர் பாட்டு தான் ஆனா தலைவர் இல்ல என சொல்வது போல் ஒரு சில இடங்களில் வந்து செல்கிறார் ரஜினி. இது மட்டும் கொஞ்சம் அதிருப்தியாக இருக்கிறது.
மற்றபடி டி ஆர் ஆட்டம் வழக்கம் போல மாஸ் தான். அனிருத் தலைவருக்காகவே மெனக்கெட்டு டியூன் போட்டு இருக்கிறார் என்பதிலும் சந்தேகம் இல்லை.