South indian cinema : தென்னிந்திய திரை உலகை இதுவரை ரஜினிகாந்த், கமல், மோகன்லால், மம்மூட்டி, விஜய், அஜித்குமார், அமிதாப்பச்சன், ஷாருக்கான், மகேஷ் பாபு போன்ற ஏராளமான நடிகர்கள் தென்னிந்திய திரையுலகை அனைவருக்கும் எடுத்துக்காட்டிய நடிகர்களாக இதுவரை இருந்து வருகின்றனர். இதற்கு அடுத்த கட்டமாக தென்னிந்திய திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் மற்றும் வசூலை அள்ளிக் கொடுக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களது படங்களை பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதலில் நடிகர் தனுஷ்,கார்த்தி. நானி, சிவகார்த்திகேயன் டோவினோ தாமஸ் ஆகியவர்கள் உள்ளனர். இவர்கள் நடித்து வெளியான படம் எத்தனை படங்கள் 100 கோடி வசூலை தாண்டி பெற்று தந்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.
யாரெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்கா?
தனுஷ் : தனுஷ் அவர்கள் தமிழ் திரையுலாக மட்டுமல்லாமல் டோலிவுட் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார் தற்போது வெளியாகியிருக்கும் குபேரா வெளியாகி சில நாட்களிலேயே “world wide” 100 கோடி வசூலை தாண்டி பெற்றுத் தந்துள்ளது. இதற்கு முன்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி மற்றும் ராயன் ஆகிய படங்கள் 100 கோடி வசூலை தாண்டி பெற்று தந்துள்ளது.
கார்த்தி : இந்த வரிசையில் இரண்டாவதாக நடிகர் கார்த்தி அவர்கள். பெரும்பாலும் இந்த பட்டியலில் நடிகர் கார்த்தி அவர்கள் இடம்பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கப்படாத ஒன்று. அமைதியாகவே தன் திறமையால் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி என்றே கூறலாம். இவரது நடிப்பில் வெளிவந்த கைதி, சர்தார், பொன்னியின் செல்வன்-1,பொன்னியின் செல்வன்-2 ஆகிய நான்கு படங்கள் திரையுலகிற்கு 100 கோடி வசூலை பெற்று தந்திருக்கிறது.
நானி : நடிகர் நானி மூன்றாவதாக இடம்பெற்றுள்ளார். நானி அவர்கள் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலும் நிறைய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈகா, தசரா, ஹிட்-3 ஆகிய மூன்று படங்கள் 100 கோடியை தாண்டியும் வசூலை பெற்று தந்துள்ளது.
சிவகார்த்திகேயன் : இந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். கடினமாக உழைத்து சிறிய அளவில் இருந்து பெரிய உயரத்தை பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். இந்த வகையில் இவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் மற்றும் அமரன் ஆகிய மூன்று படங்கள் 100 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்று தந்துள்ளது.
டோவினோ தாமஸ் : இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார் நடிகர் டோவினோ தாமஸ். டோவினோ தாமஸ் தனது மிரட்டலான நடிப்பில் நிறைய படங்கள் வெற்றிவாகை சூடி இருக்கிறது. அந்த வரிசையில் ஏ ஆர் எம் மற்றும் லூசிபர் ஆகிய படங்கள் 100 கோடியை தாண்டியும் வசூலை பெற்றுத் தந்துள்ளது.
முன்னணியான நடிகர்களுக்கு அடுத்து தென்னிந்திய திரையுலகை உச்சத்திற்கு கொண்டு செல்ல போகும் நடிகர்களின் வரிசையில் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தென்னிந்திய திரை உலகிற்கு மேலும் பெருமையை சேர்க்கிறது என்றைக் கூறலாம்.