தொலைக்காட்சி

முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் 2 சீரியல்கள்.. அடுத்தடுத்து புதுசாக வரும் 3 சீரியல்கள்

By · 26 ஜூன் 2025 · Updated 26 ஜூன் 2025
vijay tv-logo

Vijay Tv New serial: விஜய் டிவி சீரியலை பொருத்தவரை டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் முதல் ஐந்து இடங்களில் இரண்டு இடத்தை பிடிக்கும் விதமாக இந்த வாரம் சிறகடிக்கும் ஆசை மற்றும் அய்யனார் துணை சீரியல்கள் 4 மற்றும் 5 இடத்தில் இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்னும் புதுப்புது சீரியல்களை விஜய் டிவி சேனல் கொடுக்க தயாராகிவிட்டது.

அந்த வகையில் முடிவுக்கு இரண்டு சீரியல்கள் தயாராகிவிட்டது. அதாவது பிரைம் டைம் சீரியலாக இல்லாமல் இருந்தாலும் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியலாக தான் தங்கமகள் சீரியல் மக்களிடம் இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் நிரேஜின் அம்மா குற்றவாளி என்று தெரிந்த நிலையில் ஜெயிலுக்குப் போய்விட்டார்.

அதே மாதிரி ஹாசனி மீதும் தவறு இல்லை என்று மீனாட்சி புரிந்துகொண்டு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார். இப்படி ஒவ்வொரு விஷயங்களாக முடிந்து வரும் நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வரப் போகிறது. ஆனாலும் இதில் ஹீரோவாக நடித்து வரும் யுவன் மயில்சாமி அதற்குள் விஜய் டிவியில் இன்னொரு சீரியலில் கமிட் ஆகி விட்டார். இதற்கான ஷூட்டிங் ஆரம்பம் ஆகி விட்டது.

அடுத்ததாக சக்திவேல் என்ற சீரியலும் முடிவுக்கு வரப் போகிறது. இதற்கு பதிலாக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் பிரேம் மற்றும் அன்சிதா நடிப்பில் புத்தம் புது சீரியல் வர இருக்கிறது. இதற்கு அடுத்ததாக டப்பிங் சீரியலாக மகுவா ஓ மகுவா என்ற சீரியல் தமிழில் வரப்போகிறது.

இதில் நீ நான் காதல் என்ற சீரியல் மூலம் அறிமுகமான வர்ஷினி கமிட்டாகி இருக்கிறார். இப்படி இந்த மூன்று சீரியல்களும் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பழைய சீரியல்களாக இருக்கும் தங்கமகள் மற்றும் சக்திவேல் நாடகத்தை முடிக்க தயாராகி விட்டார்கள்.