சொந்த வீட்டில் தான் பிறந்து வளர்ந்தேன்.. ஆனா இப்போ வாடகை வாழ்க்கை, ரவி மோகனின் பேச்சு

Ravi Mohan : கடந்த சில மாதங்களாகவே ரவி மோகன் பற்றிய செய்திதான் உலாவி வருகிறது. அவர் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் இருந்த அடுத்தடுத்து பல திடுக்கிடும் செய்திகள் வெளியானது.

ஒருபுறம் ஆர்த்தி ரவியை குற்றம் சொல்லி அறிக்கை வெளியிட்டிருந்தார். மற்றொருபுறம் ரவி மோகன் ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா ஆகியோரை பற்றி அறிக்கை வெளியிட்டார். நீதிமன்றம் இதுபோன்று சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த செய்திகளையும் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது.

அதன் பிறகு கெனிஷா உடன் ரவி மோகன் பல விழாக்குகளில் கலந்து கொள்வது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விரைவில் சித்தார்த் நடிப்பில் உருவாக உள்ள 3BHK படம் வெளியாக இருக்கிறது. இதற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் கலந்து கொண்டார்.

வாடகை வீட்டில் வசிப்பதாக சொன்ன ரவி மோகன்

அப்போது பேசிய அவர் சொந்த வீட்டை பற்றிய கதைதான் இந்த படம். என்னுடைய வாழ்க்கையிலும் இது தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது பிறந்து வளர்ந்தது எல்லாமே சொந்த வீட்டில் தான். ஆனால் இப்போது நான் வாடகை வீட்டில் இருக்கிறேன்.

மேலும் இந்த படம் தனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. வாழ்க்கையில் முயற்சி செய்து மேலும் வளர ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக ரவி மோகன் கூறியிருக்கிறார். ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் ட்ரோலாக தான் மாறி இருக்கிறது.

ரவி மோகனின் அப்பா சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக இருந்தவர். அதோடு மட்டுமல்லாமல் இப்போது ரவி மோகன் ஒரு படத்திற்கே பல கோடிகள் சம்பளம் பெறுகிறார். இப்படி இருக்கும்போது வாடகை வீட்டில் இருக்கிறார் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →