கூலி ப்ரமோஷனும் யூடியூப் அலப்பறைகளும்.. லிஸ்ட் போட்டு கலாய்த்த பிரபலம் 

Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள கூலி ஆகஸ்ட் 14 திரைக்கு வருகிறது லோகேஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா என பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். 

அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருக்கிறது. அதற்கேற்றார் போல் அனிருத் இசையில் சிக்கிடு பாடல் நேற்று வெளியானது. அதில் டி ஆர் போட்ட ஆட்டம் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. 

இது ஒரு பக்கம் இருக்க தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகள் தொடங்கி இருக்கிறது. அதேபோல் இதை வைத்து கன்டென்ட் எடுக்கும் யூடியூப் சேனல்கள் அலப்பறையும் அதிகமாக உள்ளது.

லிஸ்ட் போட்டு கலாய்த்த பிரபலம் 

இதை ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட் போட்டு கலாய்த்துள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் கூலி படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டார். ஆகா ஓகோ என பாராட்டினார். 

தன் படத்தை தானே பாராட்டிய சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை. சூப்பர் கண்ணா என லோகேஷை பாராட்டிய தலைவர். ரஜினி சாருடன் நடித்தது நான் செய்த புண்ணியம், அமீர்கான் பேட்டி. 

தமிழில் முதல் 1000 கோடி படம் கூலி தான். ரிலீசுக்கு முன்பே ஆயிரம் கோடி சாதனை, ஆந்திரா, கர்நாடகா கேரளா மற்றும் ஹிந்தியில் வரலாறு காணாத சாதனை. இப்படி தலைப்பு வைத்து பல சேனல்கள் வீடியோ போட்டு வருகின்றன. 

அதை ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். மேலும் நாளை கூலி படத்தின் பல அப்டேட் வர இருக்கிறது. அதை போல் இனி தினந்தோறும் அப்டேட் மழை தான். அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் ப்ரமோஷன் பிரம்மாண்டமாக செய்ய திட்டமிட்டு இருக்கிறது சன் பிக்சர்ஸ்.