பான் இந்தியா ஸ்டாராக மாறும் தனுஷ்.. வேகம் எடுக்கும் அசுரனின் மார்க்கெட்

Dhanush: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளியானது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருந்தார்.

எந்த ஹீரோவுக்கும் இப்படி ஒரு தைரியம் வந்திருக்காது. ஆனால் தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருக்கிறார். அது திரையில் பார்க்கும் போதே தெரிகிறது.

அதனாலேயே தற்போது படம் 100 கோடி வசூல் பெற்றுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியாகி இருந்த இப்படத்தால் தனுஷின் மார்க்கெட் அக்க்கட தேசத்தில் உயர்ந்துள்ளது.

வேகம் எடுக்கும் அசுரனின் மார்க்கெட்

இதற்கு முன்பே அவர் நடிப்பில் வாத்தி தமிழ் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது குபேரா அவரை வெற்றி ஹீரோவாக மாற்றி இருக்கிறது. அதனாலேயே அவர் அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக ஒரு செய்தி பரவுகிறது.

அது மட்டும் இன்றி ஏற்கனவே பாலிவுட்டிலும் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. முன்னதாக அவர் நடித்த ராஞ்சனா 105 கோடி வசூலித்திருந்தது. அதே இயக்குனருடன் தனுஷ் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படமும் பெரிய லெவலில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியாக மூன்று மொழிகளிலும் தனுஷ் அசைக்க முடியாத நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இவர் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. அது மட்டும் நடந்து விட்டால் பான் இந்தியா ஸ்டாராக மாற முடியும்.

ஆனால் அந்த மொழி ரசிகர்களுக்கும் தனுஷ் பிடித்தமான நடிகர் தான். அது மட்டும் இன்றி ஹாலிவுட்டில் கூட இவர் கால் பதித்து விட்டதால் பான் இந்தியா ஸ்டார் என்பதில் சந்தேகம் இல்லை என தனுஷ ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்.