தொலைக்காட்சி

சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டை வந்த ஆனந்தி.. கோகிலா திருமணத்தில் அவிழ இருக்கும் மர்ம முடிச்சுகள்!

By · 27 ஜூன் 2025
Singapenne

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மர்மத்திற்கும் எப்போது விடை தெரியும் என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

அதற்கான தருணம் தான் நெருங்கி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் ஆனந்தி கடைசியாக அன்பு வீட்டு வாசலில் நின்று அந்த வீட்டை பார்த்துவிட்டு செவரக்கோட்டைக்கு செல்கிறாள். ஆனந்தியை பொருத்தமன் யாழினிக்கு வாக்கு கொடுக்கப்படுகிறது இனி இனி சென்னை பக்கம் வரப்போவது கிடையாது.

செவரக்கோட்டை வந்த ஆனந்தி

ஆனந்தி அந்த வீட்டு வாசலில் நின்று அழுவதை அன்புவின் அம்மா லலிதா பார்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் சொந்த ஊருக்கு வந்த ஆனந்திக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

மேலும் கோகிலாவின் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மகேஷ், ஆனந்தியின் தோழிகள் என எல்லோரும் செவரக்கோட்டைக்கு செல்வதற்கு ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தி வாழ்க்கையை சுழற்சி அடிக்கும் அவளுடைய கர்ப்பம் மற்றும் அதை தொடர்ந்து நடக்கும் மர்மங்கள் அத்தனையும் இந்த திருமணத்தில் தான் வெளிவரப்போகிறது. இதற்கு காரணமாக இருக்கப் போவது அன்புவின் அம்மாதான்.

மகனின் விருப்பத்திற்காக ஆனந்தியின் சொந்த ஊருக்கே வந்து பெண் கேட்கும் முடிவு லலிதா எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை தொடர்ந்து அத்தனை பேரும் முன்னிலையிலும் ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதை சொல்வாள். இதைத் தொடர்ந்து என்னென்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.