வார விடுமுறையில் தியேட்டர் போக திட்டமா.. கண்ணப்பா உட்பட இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் 5 முக்கிய படங்கள் என்னென்ன?

Kannapaa: இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான என்று தியேட்டரில் மொத்தம் ஐந்து முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதில் ஓரளவுக்கு எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை ரிலீஸ்க்கு முன்பே பெற்றிருக்கின்றன.

வார விடுமுறையில் தியேட்டருக்கு போக திட்டம் போட்டு இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த படங்களின் லிஸ்ட்டை தெரிந்து கொண்டு போகலாம்.

5 முக்கிய படங்கள்

மார்கன்: விஜய் ஆண்டனி நடிப்பில் அவரே இசையமைத்து தயாரித்திருக்கும் படம் மார்கன். இந்த படத்தில் பிரகிடா மற்றும் சமுத்திரகனி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். கொலையை கண்டுபிடிக்க போகும் அனுபவிக்க காவல் அதிகாரிக்கு ஒவ்வொரு நபரிலும் கிடைக்கும் புதுப்புது விஷயம் தான் இந்த படத்தின் பெரிய பாசிடிவ்.

லவ் மேரேஜ்: இருகப்பற்று திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் லவ் மேரேஜ். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஷண்முகப்பிரியன் இயக்கியிருக்கிறார்.

30 வயது நிறைந்த ஹீரோ திருமண ஏக்கத்தோடு இருப்பதும் பெண் பார்க்கப்போன இடத்தில் அந்த பெண் மீது வரும் காதல் மற்றும் அதன் பின்னால் வரும் பிரச்சனை தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு இதுவரை ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

குட் டே: பிரித்விராஜ் மகாலிங்கம் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் குட் டே. குடும்பத்தை விட்டுவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார் ஹீரோ.

அங்கே மேனேஜர் பெண் ஒருவரிடம் தவறாக நடப்பதை கண்டிக்கும் ஹீரோவுக்கு பல பிரச்சனைகள் வருகிறது. குடிபோதையில் பழைய காதலியை சந்திக்க போகும் போது அங்கே ஏற்படும் பிரச்சனை மற்றும் அதைத்தொடர்ந்து நகரும் கதை இது.

கண்ணப்பா: பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் பல கோடி பட்ஜெட்டில் வெளியாகி இருக்கும் படம் தான் கண்ணப்பா.

புராண காலத்தில் சிவன் கண்ணில் ரத்தம் வருவதை பார்த்து தன்னுடைய கண்களையே பிடுங்கி வைத்த கண்ணப்பாவின் கதையைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை ஏற்கனவே ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பிரம்மிப்பாக இருக்கிறது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள்: காமராஜர் படத்தை வெளியிட்ட பட குழு தான் இந்த திருக்குறள் படத்தையும் வெளியிட்டு இருக்கிறது. திருவள்ளுவரின் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் இந்த படம்.

மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாய் வாழும் திருவள்ளுவர் உலகப் பொதுமறை திருக்குறளை எழுத ஆரம்பிக்கிறார். அந்த சமயத்தில் இரு நாட்டுக்கும் இடையே போர் எழுகிறது. அந்தப் போரிலும் கலந்து கொள்கிறார். இது குறித்த கதை தான் இந்த படம்.