Killer movie: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. வாலி மற்றும் குஷி போன்ற படங்களின் மூலம் அஜித், விஜய் இருவரின் சினிமா கேரியரையே மொத்தமாக புரட்டிப் போட்டவர். அதன் பின்னர் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இயக்கத்தை தாண்டி நடிப்பு உலகம் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தற்போது நவீன காலத்து நடிகவேள் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு திறமையை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறார்.
கில்லர் அப்டேட்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மீண்டும் தன்னுடைய இயக்குனர் கேரியருக்கு திரும்ப எஸ் ஜே சூர்யாவுக்கு ஆசை வந்திருக்கிறது.
அவருடைய பத்து வருட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய கனவு படமான கில்லர் என்னும் படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் பார் இந்தியா திரைப்படம் ஆக வெளியாக இருக்கிறது.
கவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கிஸ் திரைப்படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்.
கோகுலம் சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு எஸ் ஜே சூர்யா வின் திறமையை அடையாளம் கண்டு கொள்ளாததால் அவருடைய பல படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால் இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக இருப்பதால் கண்டிப்பாக கில்லர் படத்திற்கு பெரிய அளவில் எது எது பார்த்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.