நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை.. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்!

தென்னிந்திய திரைப்பட உலகம் வெகுவாக வளர்ந்திருக்கும் நிலையில், கதாநாயகிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். முன்னணி நடிகைகள் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் தங்கள் இடத்தை வலுவாகப் பிடித்துள்ளனர்.

இதனால், இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் வானுக்கு நேர் உயர்ந்திருக்கிறது. 2025 இல் அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நயன்தாரா: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காலத்தால் மாறாத ஹிட்ஸ் கொடுத்துள்ளார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர், ஒரு படத்திற்கு ரூ.8 கோடி முதல் 18 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

த்ரிஷா: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்தவர். மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் மூலம் பான்-இந்தியா ரீச் பெற்றவர். தற்போது ரூ.10 கோடி முதல் 11 கோடி வரைசம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

சமந்தா: பார்வையில் மென்மையும், நடிப்பில் தைரியமும் கொண்ட சமந்தா, இரு மொழிகளிலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் ஒரு படத்திற்காக ரூ.8 கோடி முதல் 10 கோடி சம்பளம் பெறுகிறார்.

சாய் பல்லவி: பிரேமம் படத்தில் மலர் டீச்சராக ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, சமீபத்தில் அமரன் படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ.18 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும், ஹிந்தியில் ராமாயணக் கதையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூஜா ஹெக்டே: கவர்ச்சி, காமெடி, ரொமான்ஸ் என பல வகை கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் பூஜா ஹெக்டே, தெலுங்கு சினிமாவில் அதிகமான வரவேற்பு பெற்றுள்ளார். இவர், ஒரு படத்திற்கு ரூ.6 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெறும் இவருக்கு தமிழ், ஹிந்தி வாய்ப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

ராஷ்மிகா மந்தன்னா: “நேஷனல் கிரஷ்” என்ற பட்டத்தை ரசிகர்களிடம் பெற்ற ராஷ்மிகா, புஷ்பா படம் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். அழகும், எளிமையும் சேர்ந்த நடிகையாக விளங்குகிறார். இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ.6 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.