இளம் பெண்களை குறி வைக்கும் சைக்கோ கில்லர்.. விஜய் ஆண்டனியின் மார்கன் எப்படி இருக்கு.? விமர்சனம்

Maargan Movie Review: லியோ ஜான்பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று மார்கன் வெளியாகி இருக்கிறது. சமுத்திரக்கனி பிரிகிடா, அஜய் திஷான் என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை சுருக்கம் என்ன தியேட்டரில் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒர்த்தா என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

கிரைம் திரில்லர் படங்கள் என்றாலே முதலில் ஒரு கொலையில் இருந்து தான் தொடங்கும். அப்படித்தான் இப்படத்திலும் ஒரு இளம் பெண் கொலையாகிறார். ஆனால் கொலைகாரன் அந்த பெண்ணிற்கு ஒரு ஊசியை போட்டு கொலை செய்கிறான்

அந்த ஊசியை போட்டதும் அப்பெண்ணின் உடல் முழுவதும் கருப்பாக மாறி மரணம் நேர்கிறது. இந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தும் நிலையில் விஜய் ஆண்டனி இதை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.

விஜய் ஆண்டனியின் மார்கன் எப்படி இருக்கு.?

அவர் மகளும் இதே போல் இறந்திருப்பார். அது மட்டும் இன்றி விஜய் ஆண்டனியின் பாதி உடல் இதேபோல் கருப்பாக இருக்கும். இதற்கு என்ன காரணம்? இளம் பெண்களை கொலை செய்யும் அந்த சைக்கோ கில்லர் யார்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தின் ஆரம்பமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதை தொடர்ந்து அடுத்த காட்சிகளும் சஸ்பென்சுக்கு குறை வைக்காமல் இருக்கிறது. கொலைகாரனை விஜய் ஆண்டனி நெருங்கும் காட்சிகளும், அதைத்தொடர்ந்து வரும் ட்விஸ்ட் அனைத்துமே சிறப்பு.

அதேபோல இறுதிவரை கொலைகாரன் யார் என்பதை ஆடியன்ஸ் கண்டுபிடிக்க முடியாதபடி கதையை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குனர். இதுக்கே ஒரு தனி பாராட்டு கொடுக்கலாம்.

கிளைமாக்ஸ் கூட வித்தியாசமான ரகம் தான். இப்படி பக்கா க்ரைம் த்ரில்லர் கதைக்கு ஏற்றவாறு விஜய் ஆண்டனி தன் நடிப்பை கொடுத்துள்ளார். ஆக மொத்தத்தில் இப்படம் தாராளமாக தியேட்டரில் ஒரு முறை பார்க்கும் ரகமாக இருக்கிறது.