விட்டில் பூச்சிகளான திரை நட்சத்திரங்கள்.. போ…தை பழக்கத்திற்கு பின்னால் இருக்கும் பெரும் சோகம்

Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் போ…தை பொருள் வழக்கில் சிக்கி இருப்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டி போட்டு இருக்கிறது. ஸ்ரீகாந்த் மட்டும் இல்லாமல் அவருக்கு பின்னால் கிருஷ்ணா கைதாகி இருக்கிறார்.

மேலும் மூன்றெழுத்து, நடிகர் இளம் இசை அமைப்பாளர் என ஒரு ஒரு நாளும் யார் பெயர் வெளியே வரும் என கணிக்கவே முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எதற்காக இந்த திரை நட்சத்திரங்கள் எல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்ற கேள்வியும் மக்களிடையே வந்திருக்கிறது.

விட்டில் பூச்சிகளான திரை நட்சத்திரங்கள்

சினிமாவை பொருத்தவரைக்கும் எப்போதுமே மதில் மேல் பூனை என்ற நிலைமை தான். உதாரணத்திற்கு விக்ரம் படம் ரிலீசான சமயத்தில் கமலை பாராட்டாத ஆட்களே இல்லை. இந்தியன் டு ரிலீஸ் க்கு பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியது.

பக்குவப்பட்ட நடிகர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க முடியாத நடிகர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி போலீஸ் கேஸ் வரை போனதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த மதுபானத்திற்கு மாற்றாக வந்து இறங்கி இருக்கிறது தான் போ…தை பொருட்கள் இதை உபயோகப்படுத்துபவர்களை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட முடியாது.

இதனால் தான் இப்போதைய காலகட்டத்தில் இதை எளிதாக திரை நட்சத்திரங்கள் பயன்படுத்தும் அவலம் நடைபெற்று வருவதாக வலைப்பேச்சு பிஸ்மி சொல்லி இருக்கிறார்.

சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை என்றால் ஏதாவது ஒரு வேலையை தேர்ந்தெடுத்து அடுத்த கட்டத்திற்கான வாழ்க்கையை தான் பார்க்க வேண்டும். அதை தாண்டி இது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை வீணடிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று பேசி இருக்கிறார்.