அப்பா வேற, நான் வேற.. சூர்யா சேதுபதியின் அதிரடியான பீனிக்ஸ் ட்ரெய்லர்

Phoenix trailer : சண்டை பயிற்சியாளரான அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. அதுவும் பாக்சிங் வாழ்க்கையில் வீழ்ச்சி, மீட்சி ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளது. அதாவது படத்தில் சூர்யா ஒரு மல்யுத்த வீரராக இருக்கிறார்.

திறமை இருந்தும் அவரது இருப்பிடம் மற்றும் பின்தங்கிய வகுப்பில் இருப்பதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. என்ன தான் சிக்கல் வந்தாலும் அழியாத பீனிக்ஸ் பறவை போல சூர்யா மீண்டும் எவ்வாறு மீண்டும் எழுகிறார் என்பதை சுற்றி இப்படம் நடக்கிறது.

சூர்யாவின் பீனிக்ஸ் ட்ரெய்லர் விமர்சனம்

ஆரம்பத்திலேயே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறையில் நுழையும் காட்சிகள் மற்றும் பின்னர் பாக்ஸரகி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த படத்தின் டிரைலர் காண்பிக்கிறது. ஆக்ஷன் மட்டுமே கொடுக்காமல் ஆங்காங்கே காதலையும் தெளித்திருக்கிறார்.

மேலும் பல இடங்களில் விஜய் சேதுபதியின் பிரதிபலிப்பு சூர்யாவின் தோணியில் தெரிகிறது. குறிப்பாக அவரின் குரல் அச்சு அசலாக தந்தையைப் போலயே இருக்கிறது. ஒரு வாரிசு நடிகர் என்பதால் கண்டிப்பாக சூர்யாவுக்கு ஒரு அழுத்தம் இருக்கும்.

ஆனால் நான் வேறு அப்பா வேறு என்று பேட்டிகளில் சூர்யா உடைத்து பேசியிருக்கிறார். மேலும் அவருடைய அறிமுக படமே கண்டிப்பாக ஒரு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது பீனிக்ஸ் ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →