Ajith : அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் ஆதிக் உடன் தான் இணைய உள்ளார். மேலும் இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது ஏகே64 படம் இந்நிறுவனத்தை விட்டு விலகிப் போனதாக கூறப்படுகிறது. அதாவது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்று 2025 முதல் 2027 வரை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை இயக்க உள்ள 10 இயக்குனர்களின் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டது.
இதில் ஆதிக் ரவிச்சந்திரனின் பெயர் இடம்பெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல் தற்போது வரை ஏகே 64 பட தயாரிப்பதில் பேச்சு வார்த்தை தான் நடந்து வருகிறதாம். ஆனால் இப்போது ஆதிக் கதை எழுதும் பணியில் இறங்கிவிட்டார். பொதுவாகவே அவர் படப்பிடிப்பு தளங்களை பார்க்க செல்லும் செலவுகளை தயாரிப்பு நிறுவனம்தான் ஏற்றுக்கொள்ளும்.
ஏகே 64 படத்தை தவறவிட்ட வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
ஆனால் இப்போது கதை எழுதுவது மற்றும் படப்பிடிப்பு தேர்வு போன்றவற்றிற்கு அஜித்தே செலவு செய்து வருகிறாராம். மேலும் ஏகே64 படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் இடமும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆகையால் விரைவில் இந்த படத்திற்கான அப்டேட் வெளியாக இருக்கிறது.
மேலும் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்போது ரஜினியின் கூலி, ஜெயிலர் மற்றும் அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மற்றொருபுறம் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த லைக்கா நிறுவனமும் மீண்டும் படங்களை தயாரிக்க இறங்கி இருக்கிறது. விடாமுயற்சியால் நஷ்டத்தை சந்தித்த லைக்கா நிறுவனத்திற்கு மீண்டும் அஜித் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏகே 64 படத்தை தயாரிக்க வாய்ப்பளிக்க வாய்ப்புள்ளது.