தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் போரில் குதிக்கும் 4 படங்கள்.. லெஜண்ட் அண்ணாச்சி சேர்ந்தது ஹைலைட்!

Annachi Arul : பொதுவாகவே பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால் புத்தாடை, பட்டாசை விட புது படங்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது.

அந்த வகையில் இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் வர இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது பைசன். இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளி ரேஸில் குதிக்க இருக்கிறது.

அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் டியூட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்திருக்கிறார். மேலும் சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். டியூட் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் நான்கு படங்கள்

அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் கருப்பு. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படமும் வருகின்ற தீபாவளி ரீலீஸுக்கு தயாராகி வருகிறது.

அண்ணாச்சி சரவணன் அருள் லெஜன்ட் படத்தில் நடித்த நிலையில் அடுத்ததாக துரைசெந்தில் குமாருடன் கூட்டணி போட்டு இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அண்ணாச்சி செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆகையால் இந்த வருட தீபாவளி ரிலீஸுக்கு லெஜன்ட் அண்ணாச்சி, சூர்யா, துருவ் விக்ரம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் போட்டி போடுகின்றனர். அதில் யாருக்க வெற்றி கிடைத்த அதிக வசூலை பெறுகிறார்கள் என்று பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →