Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்கவி மற்றும் வாத்தியார் இரண்டு பேரும் கொடைக்கானலுக்கு வந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் இதையும் கெடுக்கும் விதமாக தர்ஷன், வீட்டை விட்டு ஓடி கொடைக்கானல் பக்கம் வந்து விட்டார். இதனால் வெறிகொண்டு கோபத்தில் இருக்கும் அறிவுக்கரசி, தர்ஷன் பார்கவி தேடி தான் போயிருப்பான்.
அதனால் பார்க்கவியை காலி பண்ணி விட்டால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று அடியாட்கள் மூலம் பார்க்கவி மற்றும் வாத்தியாரை தீத்துக்கிட்ட ஆள் அனுப்பி விட்டார். அந்த வகையில் பார்க்கவி வீட்டை மோப்பம் பிடித்த அறிவுகரசியின் அடியாட்கள் வாத்தியாரிடம் பார்க்கவியின் போட்டோவை காட்டி இந்த பொண்ணை பார்த்தீர்களா என்று கேட்கிறார்.
வாத்தியாரும் எனக்கு தெரியாது என்று அவர்களை சமாளித்து அனுப்பினாலும் அறிவுக்கரசி வந்ததுக்கு அப்புறம் எல்லாம் தலைகீழாக மாறப் போகிறது என்பதற்கு ஏற்ப அறிவுகரசியிடம் பார்க்கவி மற்றும் வாத்தியார் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள். அந்த நேரத்தில் ஜீவானந்தம் இவர்களை காப்பாற்றும் விதமாக வரப்போகிறார். அப்படி காப்பாற்றிய பொழுது தர்ஷனும் ஜீவானந்த இடம் வந்து சேர்ந்து விடுவார்.
கடைசியில் ஜீவானந்தம் கஸ்டடியில் வாத்தியார் பார்கவி மற்றும் தர்ஷன் இருக்கும் பட்சத்தில் சக்தி கொடைக்கானலுக்கு வந்ததும் இதற்கெல்லாம் மூல காரணம் ஜீவானந்தம் என்று தவறாக புரிந்து சண்டை போட போகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் மற்றும் கதிர், தர்ஷனை நான்கு பெண்களும் சேர்ந்து தான் ஜீவானந்தத்தின் மூலம் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்.
ஆனால் நான்கு பெண்களும், தர்ஷனை கடத்தி கஸ்டடியில் வைத்து கொடுமைப்படுத்துவது குணசேகரன் என்று நினைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லோருடைய நினைப்பும் தவறுதான் சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா பிரச்சனைகளும் ஒன்று சேர போகிறது. ஆனால் இந்த பிரச்சனை முடிவில் அறிவுக்கரசி குணசேகரன் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்கள்.