மகா சங்கமத்தால் டாப் கியரில் போகும் மூன்று முடிச்சு.. பிளான் பண்ணி தூக்கிய சன் டிவி

Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய அளவிற்கு கதைகள் இருக்கிறது. அதனால் தான் பல வருடங்களாக தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் முதலிடத்தை பெற்று வருகிறது. ஆனால் தற்போது சன் டிவியுடன் போட்டி போடும் விதமாக விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் முதல் ஐந்து இடங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இப்படியே போனால் கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவியில் உள்ள சீரியல்கள் தோல்வி அடைந்து விடும் என்பதால் பிளான் பண்ணி சன் டிவி மகா சங்கமத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் ஆரம்பித்த மகா சங்கமத்தில் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் போன்ற இரண்டு சீரியல்கள் சங்கமம் ஆகி வருகிறது.

சன் டிவி போட்ட கணக்கு எப்பொழுதுமே தப்பாகாது என்பதற்கு ஏற்ப மகா சங்கமம் மூலம் மக்கள் தொடர்ந்து பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இது மாதிரி எந்தவித சீரியலும் இப்படி ஒரு சுவாரஸ்யத்தை கொடுத்ததில்லை, நந்தினி சூர்யா ஆதிரை பிரபு இவர்களுடைய காம்பினேஷனில் நாடகம் டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் நந்தினிக்கு பாதுகாப்பாக எப்பொழுதும் இருக்கும் சூர்யா இந்த முறையும் கோயில் திருவிழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதற்காக காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றி வருகிறார். அதே மாதிரி ஆதிரை பிரபு ஆசைப்பட்ட மாதிரி சம்பந்தி விருந்து நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக பிரபுவும் அதிக அளவில் மெனக்கெடு செய்து வருகிறார்.

இந்த சங்கமத்தால் சூர்யா நந்தினியின் காதல் வெளிவரப் போகிறது, பிரபுவும் ஆதரையை புரிந்து கொண்டு கஞ்சத்தனத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவார். இந்த மகா சங்கமத்தை தொடர்ந்து அடுத்து எதிர் நீச்சல் மற்றும் சிங்க பெண்ணே அதற்கு அடுத்தபடியாக கயல் மற்றும் அண்ணன் சீரியலும் ஒன்றாக இணையப் போகிறது.