பொன்னியின் செல்வன் போல டுபாக்கூர் படம் இல்ல.. கண்ணப்பாவுக்கு ப்ளூ சட்டை கொடுத்த விமர்சனம்

Kannappa : நேற்றைய தினம் விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் மற்றும் விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா ஆகிய படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கண்ணப்பா படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார். அதாவது புராணக் கதையை படமாக எடுத்திருக்கிறார்கள். மணிரத்னம் பிரம்மாண்ட பட்ஜெட் போட்டு பொன்னியின் செல்வன் என்ற டுபாக்கூர் படத்தை எடுத்திருந்தார்.

ஆனால் அது போல் எடுக்காமல் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் நல்ல படமாக கண்ணப்பா படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதாவது சிறு வயதில் தனது நண்பனை ஊர் மக்கள் பலி கொடுப்பதால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் கதாநாயகன்.

கண்ணப்பா படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்

அதனால் நாத்திகனாக இருக்கும் அவர் எவ்வாறு சிவன் பக்தனாக மாறுகிறார் என்பது தான் கண்ணப்பன் படத்தின் கதை. ஆனால் ஒருவருக்கு தானாகவே கடவுள் பக்தி வராமல் வலுக்கட்டாயமாக வந்தது போல் படம் அமைந்திருக்கிறது.

அதாவது கதாநாயகியை கடத்தி அதன் மூலம் பக்தி வர செய்கிறார்கள். அதில் தான் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி கடவுள் பக்தி உள்ளவர்கள் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

அந்த சூழல் நன்றாக இருக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவு, இசை எல்லாம் பக்காவாக பொருந்தி உள்ளது. ஆகையால் கண்ணப்பா படத்தை பார்க்கலாம் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் கொடுத்திருக்கிறார். இவரே இவ்வாறு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கிறாரே கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →