2023 மாமன்னன் படத்தோடு ஹீரோ அவதாரத்திற்கு எண்டு கார்டு போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இப்பொழுது படங்கள் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தங்களுடைய ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் கடைசியாக இவர்கள் தயாரித்த படம் தக்லைஃப். இப்பொழுது முழு நேர அரசியல்வாதியாக கலக்குகிறார்.
விளையாட்டு துறையை முழுவதுமாக தன் வசம் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அது மட்டும் இல்லாமல் துணை முதல்வராகவும், வருங்கால இளைஞர்களை விளையாட்டு, கல்வி போன்றவற்றில் ஊக்குவிக்கும் இளைஞர் படையை தன் கையில் வைத்துள்ளார்.
இப்பொழுது படங்களை வாங்கி விநியோகம் செய்யும் வேலையை மட்டும் பார்த்து வருகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ். ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ள ரஜினியின் கூலி படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியுள்ளது. அதைப்போல் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் ரைட்சும் இவர்கள் கையில் தான் இருக்கிறது.
இந்நிலையில் தான் முக்கிய வார்னிங் ஒன்று மேலிடத்தில் இருந்து உதயநிதிக்கு வந்துள்ளது. கடந்த முறை தேர்தலின் போது, சினிமா துறை முழுவதும் திமுக கைவசம் தான் இருக்கிறது என ஒரு பேச்சு வந்தது. இது அவர்களுக்கு தேர்தலில் பெரும் பாதகத்தை விளைவித்தது. அதனால் இம்முறை அதிலிருந்து வெளிவர திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதியை கூப்பிட்டு சில அறிவுரைகளை கூறியிருக்கிறாராம். தேர்தல் நெருங்கி விட்டதாகவும், சினிமாவில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுரை கொடுத்துள்ளாராம். இதனால் கூலி மற்றும் பராசக்தி படத்தோடு அவர்கள் சிறிது காலம் பிரேக் கொடுக்கப் போகிறார்கள்.