2025ல் பாலிவுட் புதிய பக்கத்தைத் தொடங்குகிறது. தென்னிந்திய திலகங்கள் சாய் பல்லவி, சம்யுக்தா, ஷீனா சோஹான், ஸ்ரீ லீலா,கீர்த்தி சுரேஷ் ஹிந்தித் திரையுலகில் களமிறங்குகிறார்கள். பன்இந்தியா கவர்ச்சி, தனித்துவமான நடிப்பு இவர்களின் அடையாளம். இவர்களின் வருகை பாலிவுட்டை ஒரு புதிய அலைக்குள் இழுத்துச் செல்லும்!
சாய் பல்லவி – இயற்கை நடிப்பின் மாஸ்டர்
தன் இயற்கையான நடிப்பு மற்றும் எளிமையான பங்களிப்பால் திரை உலகில் தனித்த இடத்தை பெற்றவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’, ‘கார்கி’ போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்துள்ளார். இப்போது, அதே உணர்வும் உண்மையும் கொண்டு ராமாயணம் என்ற பாலிவுட் படத்தில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரான்பீர் கபூர் & சன்னி டியோல் உடன் நடிக்கிறார்.
சம்யுக்தா – பன்முகத் திறமை கொண்ட நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவுகளில் வெற்றிப் படங்களின் மூலம், சம்யுக்தா தன்னுடைய நடிப்புத்திறமையால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இப்போது “Maharagni – The Queen Of Queens” என்ற பாலிவுட் படத்தில் காஜோல் மற்றும் பிரபு தேவா உடன் நடிக்க இருக்கிறார்.
சீனா சோஹான் – பல்துறை அனுபவம் கொண்ட நடிப்பு ஜொலிப்பு
தேசிய விருது பெற்ற இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார், மம்முட்டியுடன் ‘தி ட்ரெயின்’ படத்தில் நடித்துள்ளார். “Sant Tukaram” படத்தில் பிரத்யேக கதாபாத்திரத்தில் நடித்து பங்களிப்பு செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் பரிச்சயமான இவர், பாலிவுட் தான் ஒரு மிகப்பெரிய மேடை என நம்புகிறார்.
கீர்த்தி சுரேஷ் – தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை
அழகு, அழுத்தமான நடிப்பு, அழகான சிரிப்பு என ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். Yash Raj Films நிறுவனத்தின் அக்கா (பழிவுத்திரைப்படம்) படத்தில் தலைமை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிரத்தியேக தலைமை வேடத்தில் Rajkummar Rao உடன் சமூகார்ப்பணமிக்க படத்தில் அறிமுகமாகிறார்.
ஸ்ரீ லீலா – ஜென்-ஸி பரபரப்பான நடிப்பு ராணி
தென்னிந்தியாவில் தனக்கென ரசிகர் வட்டம் உள்ள இவர், கனடா மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். அனுராக் பாசு இயக்கத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படத்தில் அறிமுகமாகிறார். “2025 is the year of new beginnings” என்று கூறி, தென்னிந்திய பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை வென்ற இவர் முதன் முறையாக பாலிவுட் திரையில் நுழைகிறார்.