சிங்கப்பெண்ணில் குடும்பத்திற்காக மண மேடை ஏற போகும் ஆனந்தி.. யாரும் எதிர்பார்க்காத புதிய திருப்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் அடுத்த கட்ட கதை நகர்வுதான் அந்த சீரியலையே காப்பாற்ற போகிறது. ஆனந்தி கர்ப்பமானதிலிருந்தே சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டது.

மகேஷ் தான் இதற்கு காரணம் என இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும். இல்லை என்றால் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாள் என யாரோ மருத்துவர் பொய் சொல்ல சொல்லி இருக்க வேண்டும். இதைத் தாண்டி இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைகளும் நேயர்களை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய அதிருப்திதான்.

எதிர்பார்க்காத புதிய திருப்பம்

இந்த நிலையில் தான் ஆனந்தி தற்போது கோகிலா திருமணத்திற்காக அவளுடைய சொந்த ஊருக்கு வந்து இருக்கிறாள். ஏற்கனவே அந்த ஊரில் அவளுடைய குடும்பத்தை காலி பண்ண சுயம்புலிங்கம் காத்திருக்கிறான்.

இனி சுயம்புலிங்கத்தோடு சேர்ந்து மித்ரா ஊருக்குள் நுழையாமலேயே பெரிய பெரிய பஞ்சாயத்தை எல்லாம் பண்ணுவது உறுதி. ஒரு கட்டத்தில் கோகிலாவின் திருமணத்தில் மிகப்பெரிய பிரச்சனை நடந்த ஆனந்தி மணமேடை ஏற இருக்கிறாள்.

அந்த சமயத்தில் தான் அவள் கர்ப்பமாக இருக்கிறாளா அல்லது அவளை சுற்றி நடக்கும் மர்மம் என்ன என்பது தெரிய வரப்போகிறது. இந்த அடுத்த கட்ட கதை நகர்வில் அன்பு, மகேஷ் மற்ற அனைவரும் ஆனந்தியின் ஊருக்கு வருவது, காதல், கர்ப்பம், துரோகம், நட்பு என எல்லாமே கலந்திருக்கப் போகிறது.