TVK-Vijay: விஜய்யின் அரசியல் வருகை பல பேருக்கு பதட்டத்தையும் எரிச்சலையும் கிளப்பி இருக்கிறது. அதிலும் அவர் தன்னுடைய அரசியல் எதிரி யார் என்பதை வெட்ட வெளிச்சமாக கூறிவிட்டார்.
அதனாலேயே சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராக பல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அவர் எது செய்தாலும் அந்த கட்சியின் B டீம் என சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் இரு நாட்களாக தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இது அரசல் புரசலாக பேசப்பட்ட செய்தி தான்.
TVK விஜய் உறுதி
ஆனால் இப்போது பார்த்தால் கிட்டத்தட்ட உறுதி என்பது போல் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அப்படி எந்த கூட்டணியும் கிடையாது.
ஜெயிச்சாலும் தோத்தாலும் தனியாகத்தான் போட்டியிடுவோம் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் விஜய் ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என்பது தெரிகிறது.
ஏற்கனவே அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்ற பெயரையும் பெற்றுள்ளார். அதில் தற்போது கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிட போகிறார் என்பதும் வரவேற்கப்படுகிறது. ஆனால் அந்த தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக இருக்குமா என்பது வாக்காளர்களின் கையில் தான் உள்ளது.