சிங்கப்பெண்ணே-க்கு பதிலா பூனை பெண் என்று வச்சுக்கோங்க!. ரசிகர்களின் பிபியை எகிற விடும் இயக்குனர்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் மொத்தமாக தன்னுடைய செல்வாக்கை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சீரியலில் ஹீரோயின் ஆக நடிக்கும் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.

ஆனால் சிங்க பெண்ணே சீரியலில் மட்டும் தான் ஹீரோயினாக நடிக்கும் ஆனந்தி கதாபாத்திரத்தை மொத்தமாக வெறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் ஆனந்தி அன்பு உடன் தான் சேர வேண்டும் என அவ்வளவு உறுதியாக இருந்தார்கள்.

ரசிகர்களின் பிபியை எகிற விடும் இயக்குனர்

ஆனால் தற்போது இந்த சீரியலின் நிலைமையே வேறு. ஆனந்தியை யாருடன் வேண்டுமானாலும் சேர்த்து வையுங்கள், தயவு செய்து அரைத்த மாவையே அறைக்காதீர்கள் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று பரபரப்பாக தேடி கொண்டு இருந்த ஆனந்தி தற்போது அக்கா கோகிலாவின் கல்யாண ஏற்பாடுகளை சிறப்பிக்க சொந்த ஊருக்கு சென்று விட்டாள். இப்போது இந்த கோகிலா கல்யாணத்தை வைத்து எப்படியும் இரண்டு மாதத்திற்கு எபிசோடுகளை நகர்த்தி விடுவார்கள்.

அது வரையிலும் கர்ப்பமாக இருக்கும் ஆனந்திக்கு வாந்தி மயக்கமும் வரப்போவதில்லை, வயிறும் தெரியப்போவதில்லை. மறுபடியும் இந்த கற்பத்திற்கு யார் காரணம் என இழுத்தடிப்பார்கள்.

கிராமத்தில் இருந்து வரும் ஒரு பெண் நகரத்தில் வரும் சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு சிங்க பெண்ணாக இருக்கிறாள் என்பதுதான் இந்த சீரியலின் கதை. தற்போது கதையை மொத்தமாய் மாற்றியதற்கு பேசாமல் சீரியலுக்கு பூனை பெண் என்று வைத்து விடுங்கள் என கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.