சிரிச்சு சிரிச்சு படத்தை பிசினஸ் செய்த வெற்றிமாறன்.. மரண மாஸாக உருவாகவும் STR50

Vetrimaran : வெற்றிமாறனின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருவது வழக்கம் தான். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சிம்புவின் 50வது படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு எடுத்துவிட்டது. படப்பிடிப்பில் நெல்சன் கலந்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் படத்தின் டைட்டில் வீடியோ சூட் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 16ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் அட்டகத்தி படத்தை முதலில் யாரும் வாங்க வரவில்லையாம். இதனால் இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் பிரீமியர் ஷோவை ஏற்பாடு செய்திருக்கிறார்.

வெற்றிமாறனால் பிசினஸான படம்

அப்போது பல இயக்குனர்கள் இந்த படத்தை பார்க்கும்போது வெற்றிமாறனும் கலந்து கொண்டிருக்கிறார். படத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தாராம். வெற்றிமாறன் சிரித்ததை பார்த்தே படத்தை வாங்கி விட்டார்கள்.

இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராம் வெற்றிமாறனுடன் இருக்கும்போது கூறினார். மேலும் அந்த படம் சென்னையில் உள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்ததாக வெற்றிமாறன் கூறினார்.

அதன் பிறகு அட்டகத்தி படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பா ரஞ்சித்திற்கு அடுத்தடுத்த படங்கள் கிடைக்க இப்போது முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →