தனுஷின் டார்கெட் 20 கோடி தானா.? D போட்ட கணக்கு, தப்புமா வெற்றி, சிம்பு கூட்டணி.?

Dhanush: நேற்றிலிருந்தே தனுஷ் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளார். குபேரா படத்திற்கு பிறகு தற்போது அவர் ஹிந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இங்கு அவருடைய பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது.

அதாவது வெற்றிமாறன், சிம்பு இணைந்துள்ள படத்தின் ப்ரோமோ சூட் முடிந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் அந்த வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவந்து விடும்.

ஆனால் அதற்கு முன்பு எனக்கு 20 கோடி ராயல்டி காசு தர வேண்டும் என தனுஷ் பிரச்சனை செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் வெற்றிமாறன் சிம்பு இணையும் படம் வடசென்னை யூனிவர்சில் வர இருக்கிறது.

அப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்த ராஜன் கேரக்டர் தான் இப்போது தனி படமாக உருவாக இருக்கிறது. வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் வெற்றிமாறன் இது குறித்து பேசி இருக்கிறார்.

தப்புமா வெற்றி, சிம்பு கூட்டணி.?

அவரும் தாராளமா பண்ணுங்க என சொல்லிவிட்டு இப்போது படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளரிடம் 20 கோடி கேட்டிருக்கிறார். இதுதான் இப்போது தனுஷ் விமர்சிக்கப்படுவதற்கு காரணம்.

ஆனால் உண்மையில் தனுஷின் நோக்கம் 20 கோடி வாங்குவது தானா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. வெற்றிமாறன் சிம்பு கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.

அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை கேட்டிருக்கிறார். இதை நிச்சயம் தயாரிப்பாளரால் கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படம் தள்ளிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

அவ்வளவு ஏன் அறிவிப்பு வீடியோ கூட வெளிவருவதும் சந்தேகம்தான். இதெல்லாம் கணக்கு போட்டு தான் தனுஷ் இப்படி ஒரு வேலை பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் இதில் உண்மை கிடையாது தேவையில்லாத வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். உண்மையில் தனுஷின் நோக்கம் இதுதான் என்றால் வெற்றிமாறன் அதை அசால்ட்டாக டீல் செய்து விடுவார்.

பார்க்கலாம் தனுஷின் திட்டம் பலிக்கிறதா? அல்லது வெற்றிமாறன் சிம்பு கூட்டணி ஜெயிக்கிறதா? என்று.