Cinema : தமிழ் சினிமா நமக்கு தினம் தினம், புது புது அருமையான வியக்கத்தக்க விஷயங்களை அள்ளித்தருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் தரமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுவருகிறது. அதற்கு காரணம் நல்ல திறமையான இயக்குனர்கள் புது கதையாக மற்றும் இந்த காலத்தின் தேவைகளை பொறுத்து கதைகைளை தேர்வு செய்வதும் தான்.
இந்த காலத்தில் திரையில் படமாக மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் குறும்படம் எடுத்தும் தன் திறமையின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கின்றனர். தயாரிப்பாளர்களே தேடி போய் புதுமுக இயக்குனர்களை தேர்வும் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒவ்வொரு நாலும் அறிமுக இயக்குனர்கள் வந்த விதமாகத்தான் இருக்கிறார்கள் தமிழ் திரையுலகில். இவ்வாறாக 2025 தமிழ் சினிமா இதுவரை நமக்கு மூன்று அருமையான அறிமுக இயக்குனர்களை கொடுத்துள்ளது. இந்த மூன்று இயக்குனர்களும் வித்யாசமான கதைகளை இயக்கி தன் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
தரமான 3 புது இயக்குனர்கள்
ராஜேஸ்வர் காளிசாமி : இவர் தமிழ் திரைப்பட இயக்குனர். தமிழ் திரையுலகை இவர் அறிமுகமான படம் குடும்பஸ்தன். இந்த திரைப்படம் முற்றுலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த ஒருவன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரிச்சினைகளையும், அதை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை பொருத்தும் இந்த கதைக்களம் அமைத்திருக்கும். இந்த படமானது வித்தியாசமான கதைக்களம் என்பதால் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மேலும் பேக் டு ஸ்கூல், அலும்புனாட்டிஸ் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
அபிஷன் : அபிஷன் ஜீவிந் youtube மூலம் பிரபலமான ஒரு இயக்குனர். தன் திறமையால் இளம் வயதில் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். இவர் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை எடுத்து பிரபலமானவர். இத்திரைப்படம் இலங்கை தமிழர் பற்றிய ஒரு படம். இது மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
லோகேஷ் அஜ்ல்ஸ் : லோகேஷ் அஜ்ல்ஸ் இவர் திரையுலகில் அறிமுக இயக்குனர் ஆவார். இவர் “eleven” படம் மூலம் அறிமுகமானவர். அனால் இந்த படம் இவரது முதல் படம் போலவே இல்லை. அவ்வளவு பக்குவமாக ஒரு கதையை கொடுத்திருகிறார். இந்தப்படம் ஒரு சீரியல் கில்லர் கதை பற்றிய ஒரு கதை. படம் முழுவதும் திரில்லிங், ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். படம் மொத்தமும் ஒரு கொலையாளி மீதம் உள்ளவர்களையும் கொலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மூன்று இயக்குநர்களும் தன் ஆக்கபூர்வமான கதைகள் மூலம் மக்களின் மனதை பிடித்துள்ளனர். இவர்களது திறமை இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. இவர்களின் அடுத்த இயக்கத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம்.