Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா ஆகாஷ் காதல் விஷயம் தெரிந்ததும் ஈஸ்வரி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து நம்மளுடைய பொண்ணு எப்படி அந்த வீட்டில் போய் இருக்க முடியும் என்று கோபியவும் தூண்டிவிட்டு இல்லாத பிரச்சனைகள் எல்லாம் செய்து ஆகாசையும் செல்வியையும் காயப்படுத்தினார்கள். அதோடு இல்லாமல் அவசரமாக இனியாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று சுதாகர் வீட்டுக்கு தாரவாத்து கொடுத்தார்கள்.
ஆனால் சுதாகர், பாக்யாவின் ரெண்டு ஹோட்டலை அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இனியாவை மருமகளாக கூட்டிட்டு வந்தார்.. அது மட்டும் இல்லாமல் போ**தை பழக்கத்திற்கு அடிமையான நித்தேசுக்கு வேறு எங்கேயும் பொண்ணு கிடைக்காது. இனிய அந்த வீட்டுக்கு போனதிலிருந்து நிம்மதி இல்லாமல் தான் இருந்தார்.
அந்த வகையில் நித்தீஷ் பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு கோபியிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டார். இருந்தாலும் சுதாகர் அவர்களே சமாதானப்படுத்தி இனியவை சந்தோஷமாக நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று கோபிக்கு வாக்கு கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நித்தீஷ் பற்றிய விஷயம் பாக்யாவிற்கும் தெரிந்து விட்டது. அத்துடன் நித்திஷ் இன்னும் அந்த பழக்கத்திலிருந்து வெளிவரவில்லை என்பதால் வீட்டிற்கு வந்து ஈஸ்வரி மற்றும் கோபி இடம் பாக்கியா சொல்கிறார்.
அப்பொழுது இனியா, அவங்களுக்கு உன்னுடைய ஹோட்டலை வாங்க வேண்டும், அதற்காகத்தான் என்னை மருமகளாக கூட்டிட்டு போனார்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் நல்லவங்க கிடையாது என்று இனியா சொல்லிய நிலையில் பாக்கியா, ஹோட்டலை கொடுத்த பொழுது அமைதியாக இருந்த மாதிரி இப்பொழுதும் இருக்க மாட்டேன். என்னுடைய மகளின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறார்கள் நான் சும்மா விட மாட்டேன் என்று சுதாகர் வீட்டுக்கு கோபமாக போகிறார்.
கூடவே கோபியும் போன நிலையில், சுதாகரிடம் நீங்கள் பண்ணிய அட்டூழியத்திற்கு பதில் சொல்லும் விதமாக நான் நிச்சயம் ஆக்சன் எடுப்பேன் என்று சவால் விடுகிறார். அந்த வகையில் இனி சுதாகரிடம் போட்டி போடும் விதமாக பாக்யா நிச்சயம் ஹோட்டல் மூலம் பதிலடி கொடுக்கப் போகிறார். இந்த விஷயம் எல்லாம் தெரிந்த பிறகு ஈஸ்வரி ரத்தக்கண்ணீர் வடித்து வீட்டிற்குள் அழுது கொண்டிருக்கிறார். கடைசியில் கோபியை நம்பி நித்தேஷை கல்யாணம் பண்ணியதற்கு இனிய நடுத்தெருவில் வந்து நின்ன தான் மிச்சம்.