சீதா கல்யாணத்தை நடத்தும் முத்து, மீனவால் ஏற்படும் குளறுபடி.. சகுனி வேலையை பார்க்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், காதல் தோல்வியால் துவண்டு போன ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிலைமையில் இருந்த பொழுது முத்து அந்த பெண்ணை காப்பாற்றிக் ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அட்வைஸ் பண்ணினார். தற்போது அந்தப் பெண்ணின் காதல் கைகூடி விட்டது என்பதற்கு ஏற்ப பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது.

அந்த வீட்டிற்கு போன முத்து, அந்த தம்பதிகளை ஆசீர்வாதம் பண்ணுகிறார். அப்படி பண்ணும் பொழுது முத்துவின் கண்ணுக்கு அந்த தம்பதிகள் சீதா மற்றும் அருண் போல தெரிகிறது. அதே நினைப்புடன் அவர்களை கூட்டிட்டு புகுந்த வீட்டிற்கு விடப் போகும் பொழுது காரில் வைத்து முத்து யோசித்தது என்னவென்றால் சீதா வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டியது அவள் தான். அதுல தலையிட பொறுப்பு நமக்கு இல்லை என்று முத்துவுக்கு ஞானம் பிறந்து விட்டது.

அதோடு சீதாவை சந்தித்து பேசுவதற்காக மாமியார் வீட்டிற்கு முத்துப் போகிறார். போனதும் சீதாவிடம் நீ கேட்டபடி கவர்மெண்ட் மாப்பிள்ளை, வீட்டிற்கு ஒரே ஒரு பையன் கிடைத்துவிட்டார் என்று சொல்கிறார். உடனே மீனாவின் அம்மா. அப்படி என்றால் அவர்களை உடனடியாக வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பொண்ணு பார்க்க சொல்லுங்க மாப்பிள்ளை என கூறுகிறார். அதற்கு முத்து, அதை நான் எப்படி கூப்பிட முடியும். சீதா தான் போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்ல வேண்டும்.

நான் சொன்ன மாப்பிள்ளை சீதா காதலிக்கும் அந்த அருண் தான். எனக்கு இந்த கல்யாணத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லை. சீதா ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் நடக்கும். நீ அருண் வீட்டுக்கு போன் பண்ணி வர சொல்லி என சந்தோசமாக சொல்கிறார். ஆனால் இதில் தான் ஒரு குளறுபடியும் ஏற்பட போகிறது. அதாவது தற்போது முத்து சம்மதம் கொடுத்திருந்தாலும் ஏற்கனவே சீதா மற்றும் அருணுக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் மீனா பண்ணி வைத்தார் என்று தெரிந்தால் முத்து கோபப்பட போகிறார்.

இதனால் முத்துவுக்கு மீனாவுக்கும் ஏகப்பட்ட விரிசல்கள் வரப்போகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக ரோகிணி குளிர்காயப் போகிறார். அதோடு விடாமல் சுருதி அம்மாவிடம் வாங்கிய பணத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக சுருதி ரவி அந்த வீட்டில் இல்லாத படி பிரச்சனையை உண்டாக்கி சகுனி வேலையை பார்த்து ஸ்ருதி ரவியை அவருடைய அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்கும் விதமாக ரோகிணி தில்லாலங்கடி வேலையை பார்க்க போகிறார்.