வீரா சீரியலில் விஜியை கையும் களவுமாக பிடித்த மாறன் வீரா.. கண்மணியின் அதிரடி ஆட்டம்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தில் இருக்கும் மருமகளையும் மகன்களையும் பிரித்து வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று விஜி பிளான் பண்ணினார். ஆனால் அது எதுவும் நடக்காத படி வீரா மாறன் அந்த குடும்பத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

தற்போது விஜிக்கு ஏற்படும் பிரச்சனையில் மாறன் வீராவிடம் கையும் களவுமாக விஜி சிக்க போகிறார். அதாவது விஜியின் அம்மாவுக்கு போலீஸ் மூலம் பிரச்சனை என்பதால் மகள் தங்கி இருக்கும் வீட்டிற்கு வரலாம் என்று ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்துவிடுகிறார். வந்ததும் விஜி, நீ ஏன் இங்கே வந்தாய் என்று அம்மாவை பார்த்து கேட்கிறார்.

அதற்கு விஜியின் அம்மா, என்னால் வெளியே இருக்க முடியாது. அதனால் நான் இங்கு தான் இருப்பேன் என்று சொல்லிய நிலையில் விஜி யாருக்கும் தெரியாமல் ஒரு குடோன் ரூமில் அம்மாவை தங்க வைத்து விடுகிறார்.

பிறகு பசிக்குது என்று அம்மா சொல்லிய நிலையில் விஜி யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டை எடுத்துட்டு போய் கொடுக்கிறார். இதனால் காணாமல் போன சாப்பாடு பற்றிய விஷயத்துக்கு வீராவுக்கு சந்தேகம் வருகிறது. இதோடு விடாமல் வீரா குளித்துக் கொண்டிருக்கிற பொழுது வீராவின் துணியை விஜி அம்மா எடுத்துட்டு போயி கட்டிக் கொள்கிறார்.

இதனால் வீரா தன்னுடைய டிரஸ்ஸை காணும் என்று தேடிப்பார்க்கிறார். இதற்கிடையில் விஜி குடோன் உள்ளே அடிக்கடி போயிட்டு வருவதையும் யாரிடமும் பேசுவது போல் வீரா மாறன் மற்றும் கண்மணிக்கு சந்தேகம் வந்தது. அந்த வகையில் குடோனில் செக் பண்ணுகிறார்கள். அப்படி செக் பண்ணும் பொழுது ஒளிந்து கொண்டிருக்கும் விஜியின் அம்மா மாறன் கண்ணில் சிக்குகிறார்.

அப்பொழுது மாறன் பார்க்காதபடி வெளியே போய்விடுவார், பிறகு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்மணி, விஜியிடம் பேசி பழகி அந்த அம்மாவை பற்றி விசாரித்து எல்லா உண்மையும் வாங்கிக் கொள்வார். அந்த வகையில் அனைவரது பிளான் படி விஜி வசமாக சிக்கிக் கொள்வார்.