போ…தை வழக்கில் விஜய் தான் அடுத்த டார்கெட்டா?. இந்த விஷயத்தெல்லாம் அவர்கிட்ட நோட் பண்ணிருக்கீங்களா?

Vijay: நடிகர் ஸ்ரீகாந்த் போ…தை வழக்கில் கைதானதில் இருந்தே தமிழ் சினிமாவில் யாரெல்லாம் இந்த வழக்குக்குள் வருவார்கள் என அவரவர் இஷ்டத்திற்கு ஏற்ப பேரை சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் சமீபத்திய நடிகராக சேர்ந்து இருக்கிறார் தளபதி விஜய்.

அவருக்கு மூன்றெழுத்து நடிகை ஒருவர் இந்த போ…தை பொருட்களை கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே விஜய் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பாரா என்று அவரை கவனித்துப் பார்த்தாலே தெரிந்து விடும்.

விஜய் தான் அடுத்த டார்கெட்டா?

பொதுவாகவே இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையானவர்களின் கண்கள் மற்றும் உடல் நிலையை அதை காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பாடகி சுசித்ரா சொன்ன மாதிரி கொக்…கைன் போன்ற போதை மருந்துகளை உபயோகிக்கும் போது தலைமுடி கொட்டுவது, உடல் எடை அதிகரிப்பது என நிறைய பக்க விளைவுகள் இருக்கிறது.

ஆனால் விஜய் இப்போது வரைக்கும் நடனம் ஆடுவதாக இருக்கட்டும், மாணவர்களின் கல்வி விருது வழங்கும் விழாவில் எவ்வளவு நேரம் ஆனாலும் சலிப்படையாமல் இருப்பதாக இருக்கட்டும் அவர் உடல் சரியான நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

அது மட்டுமில்லாமல் விஜயின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு முறை கூட மது குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தினார், பிரச்சனை பண்ணினார் என ஒரு வழக்கு கூட அவர் மீது கிடையாது. காய்ச்ச மரம் கல்லடி படும் என்ற மாதிரி அரசியலுக்கு வந்ததால் இது போன்ற பல குற்றச்சாட்டுகளை கடந்து தான் விஜய் பயணிக்க வேண்டி வரும்.