அடிக்கடி வெளிநாடு பறந்தது இதுக்கு தானா.. பணத்தாசையில் புருஷனையும் சிக்க வைத்த நடிகை

Gossip: கோலிவுட் திரையுலகமே இப்போது பதட்டத்தில் இருக்கிறது. எப்போது யார் பெயர் வெளிவருமோ என பிரபலங்கள் நடுக்கத்தோடு இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடிகர் சட்ட விரோத விவகாரத்தில் கைது செய்யப்பட்டதில் பல விஷயங்கள் சிக்கி இருக்கிறது. போலீசார் கிடுக்கு பிடி போட்டு விசாரித்ததில் மற்றொரு நடிகரும் சிக்கினார்.

ஆனால் இவர்களுக்கு மேல் ஒரு பெரிய குரூப் இருக்கிறது. இவர்கள் எல்லாம் வெறும் அம்பு தான். மெயின் வில்லன் வேறு ஒரு நடிகர் என்கிறது திரையுலக வட்டாரம். ஆனால் அவரை பிடிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது.

பணத்தாசையில் புருஷனையும் சிக்க வைத்த நடிகை

பெரிய இடத்து சப்போர்ட் அவருக்கு இருக்கிறது. அதேபோல் அந்த நடிகர் மூலம் பிரபல நடிகையும் அவருடைய கணவரும் கூட இதை ஒரு பிசினஸ் ஆக செய்து வந்த விஷயமும் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதனால் தான் நடிகை அடிக்கடி வெளிநாடு பறக்கிறாரா என விஷயம் தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட்டு போகிறார்கள். அதே போல் சிங்கிளாக சுற்றி வரும் ஒரு நடிகையும் இதில் பெரிய டீலராம்.

இவரை பார்ட்டி குயின் என்று கூட சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இது போன்ற பார்ட்டிகளில் தாராளமாக இந்த மருந்தை புழக்கத்தில் விட்டுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் அடிமையாகி போனது தான் அதிர்ச்சி.

தற்போது காவல்துறை எல்லாத்தையும் விசாரித்து வருகின்றனர். அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் இருக்கிறார்களாம். ஆனால் தகுந்த ஆதாரம் மட்டும் சிக்கினால் நிச்சயம் இவர்கள் மாற்றப் போவது உறுதி என்கின்றனர்.