விஜய் முடி உதிர்வுக்கு இப்படி ஒரு காரணமா.? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

Vijay : சமீபகாலமாக விஜய் பற்றி நிறைய செய்திகள் உலாவி வருகிறது. குறிப்பாக சில வருடங்களாகவே விஜய் விக் வைத்து தான் நடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு முறையும் அவரது ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது.

இவ்வாறு பல சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் விஜய்க்கு சர்க்கரை நோய் இருப்பதாக பிரபலம் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 51 வயதாகும் விஜய் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

மற்ற நடிகர்களை காட்டிலும் தனது உடல் நலத்தில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர் விஜய். இப்படி இருக்கும் சூழலில் அவரின் முடி உதிர்வுக்கு காரணம் சர்க்கரையின் அளவு அதிகமானது என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருப்பது அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்க்கு சர்க்கரை நோய் என்று கூறிய பிரபலம்

இதனால் இப்போது மருத்துவ சிகிச்சையை எடுத்து வரும் விஜய் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனமாக இருக்கிறாராம். அதாவது இரவு இரண்டு இட்லிக்கு மேல் விஜய் சாப்பிடுவது இல்லை என்றும் அந்தணன் கூறியிருக்கிறார்‌.

இவர் சொல்வது உண்மையா என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. விஜய் சினிமாவில் உச்சம் தோட்ட நிலையில் இப்போது அரசியலிலும் இறங்க இருக்கிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்த சூழலில் விஜய் உடல்நலம் குறித்து வெளியான செய்தி பேர் அதிர்ச்சி தான்.

அந்தணன் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆகையால் விஜய் தரப்பிலிருந்து தெளிவான அறிக்கை வெளியானால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.