2025 தீபாவளியில் வியப்பூட்டும் ரிலீஸ்கள் காத்திருக்கின்றன. விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அவரது இரண்டாவது படம் மற்றும் இன்னும் சில படங்கள் வெளிவருகிறது.
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூடு’
இப்படத்தை இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இதில், மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில், பிரதீப்பின் ஜோடியாக நடிக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த வாடகை தரமான படைப்பு, வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபராகலாம், நடிகராகவும் விளங்கும் லெஜண்ட் சரவணன், 2022 ல் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து, பிரபல இயக்குனர் துரை செந்தில் குமாருடன் இணைந்து தனது இரண்டாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன், இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என உறுதிபட தெரிவித்தார்.
துருவ் விக்ரமின் ‘பைசன்’
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு களமிறங்கும் சூர்யாவின் ‘கருப்பு’
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அத்துடன், சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘கருப்பு’ படமும் ரசிகர்களை சந்திக்க தயாராகிறது.
கார்த்தியின் சர்தார்-2
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. வாளுடன் அதிரடியாக காட்சியளிக்கும் கார்த்தியின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பன் மொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் வின் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.