அதிமுக ஆட்சியில் போராளிகளாக இருந்த நடிகர், நடிகைகளின் லிஸ்ட்.. இப்போ வலை வீசி பார்த்தாலும் காணலையே!

#JusticeforAjithkumar: திருப்புவனம் பகுதியில் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த காவலாளி அஜித் குமாரின் மரணத்திற்கு பொதுமக்கள் நீதி கேட்டு தங்களால் முடிந்த வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் லாக்கப் மரணத்தின் போது குரல் கொடுத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த விஷயத்தை பற்றி பேசாமல் இருப்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் போராளிகளாக இருந்த ஒரு சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

போராளிகளாக இருந்த நடிகர், நடிகைகளின் லிஸ்ட்

விஷ்ணு விஷால்: இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எல்லா உயிர்களையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும் என விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ராகவா லாரன்ஸ்: தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் குரல் கொடுத்திருந்தார்.

விஷால்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை நாம் இந்த விஷயத்தை மறந்து விடவே கூடாது. இடமாற்றம் என்பது தண்டனை அல்ல நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் என நடிகர் விஷால் மக்களிடம் வலியுறுத்தி இருந்தார்.

இமான்: ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அனுபவித்த சித்திரவதையை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இரக்கமற்ற செயலுக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இசையமைப்பாளர் இமான் பேசியிருந்தார்.

இது மட்டும் இல்லாமல் நடிகைகள் ஹன்சிகா மோத்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரம் சாத்தான்குளம் லாக்கப் டெத் மரணத்திற்கு எதிராக பேசியிருந்தார்கள்.

மேலும் நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி குரல் கொடுத்து இருந்ததும் அதிமுக ஆட்சியில் தான். நடிகர்கள் ஒன்றாக களமிறங்கி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் இந்த ஆட்சியில் தான்.

போதாத குறைக்கு கமலஹாசன் கட்சி ஆரம்பித்ததும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக பரபரப்பை கிளப்பியதும் அதிமுக ஆட்சியில் தான்.