வாடிவாசல் ட்ராப்ன்னு எவன் சொன்னது இங்க வாங்க கொஞ்சம்? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

Suriya : நடிகர் சூர்யா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஹாண்ட்ஸம் மற்றும் ரொமான்டிக் ஹீரோ. பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ லிஸ்ட்களில் முதல் முன்னிலையில் சூர்யாவிற்கென்று ஒரு தனி இடம் இருக்கும். சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் காதல் திருமணத்தில் வெற்றிடடைந்த ஜோடியாகவும் சூர்யா – ஜோதிகா உள்ளனர். தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகளும் செய்து வருகின்றனர்.

சூர்யா அவர்கள் நடித்து வெளிவந்த படங்களில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. அதே போல் நிறைய படங்கள் தோல்வியையையும் சந்தித்துள்ளது. தற்போது வெளியாகிய ரெட்ரோ படமும் சூர்யாஅவர்களுக்கு தோல்வியையே சந்தித்தது. அதனால் சூர்யா அவர்களின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே ஒரு சில படங்கள் வெற்றிவாகை சூடியது. ஆனால் ஒருசில படங்கள் நினைத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதனால் அடுத்து தேர்தெடுக்கப்படும் கதைகளில் நிதானமாகவும் பொறுமையாயையும் கையாள்கிறார் சூர்யா.

தற்போது சூர்யா அவர்கள் வெற்றிமாறன் அவர்களோடு சேர்ந்து “வாடிவாசல்” படம் செய்யப்போவதாக அப்டேட் வந்து ரசிகர்களை மிகவும் கொண்டாட வைத்தது. மகிழிச்சியிலிருந்த தருவாயிலில் திடிரென்று வாடிவாசல் படம் நிறுத்தப்பட்டது என்ற செய்தி பரவியது. இதைக்கேட்ட சூர்யா ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாயினர். சூர்யா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் படம் வெளிவந்தால் நல்ல கூட்டணியாக இருக்குமென்று நினைத்துருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்..

ஆனால் தற்போது வெற்றிமாறன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கொடுத்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ராப்-னு யார் சொன்னது, நிச்சயம் படம் உண்டு என கூறியுள்ளார். அதாவது வாடிவாசல் கதை எழுதுவதில் தாமதம் ஆகிறது எனவும், தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்கள், விலங்குகளின் பாதுகாப்பு கருதியும் கொஞ்ச காலஅவகாசம் தேவைப்படுகிறது.

இதனால் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கு. அதனால் அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துள்ளோம். இதனால் வாடிவாசல் படம் நிறுத்தப்படவில்லை, தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் என வெற்றிமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார். வாடிவாசல் பற்றிய அப்டேட் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.