முத்துக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிய மீனா.. சீதா கல்யாணத்தில் ஏற்படும் ட்விஸ்ட்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா அருண் ஒன்று சேர்ந்தால் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று முத்துவை தவிர மற்ற அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் முத்து மட்டும் அருண் மீது இருக்கும் கோபத்தால் பிடிவாதமாக சீதாவுக்கு வேற ஒரு மாப்பிள்ளையே பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சீதா மனசே மாற்ற முடியாது அருண் தான் நிறைந்திருக்கிறார் என்று முத்துக்கு தெரிந்து விட்டது.

ஆனாலும் வரட்டு கௌரவத்தால் கல்யாணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் முத்துவை சந்தித்து பேசி எப்படியாவது அருண் சீதா கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று அருண் அம்மா, முத்துவிடம் பேசுகிறார். அப்பொழுது முத்து மனசு கொஞ்சம் மாறிவிட்டது.

இதனை தொடர்ந்து முத்து, ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அந்த பெண்ணுக்கும் தற்போது காதலித்தவரோடு கல்யாணம் ஆகி சந்தோசமாக இருப்பதை பார்த்த முத்துவுக்கு சீதா ஞாபகம் வந்துவிட்டது. அதனால் சீதாவுக்கு அருணை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்.

இதற்கிடையில் மீனா, முத்துவிற்கு நம்பிக்கை துரோகம் பண்ணியது போல் சீதாவிடம் பீல் பண்ணி பேசுகிறார். இதுவரை நான் அவருக்கு தெரியாமல் எதையும் பண்ணினதே இல்லை. ஆனால் இப்பொழுது உனக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்ததை தெரிந்து கொண்டால் என்ன ஆகும் தெரியவில்லை.

அதே நேரத்தில் உண்மையை மறைத்துக் கொண்டு துரோகம் பண்ண முடியவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை அவரிடம் சொல்லலாம் என்று மீனா, சீதாவிடம் சொல்கிறார். இருந்தாலும் கோவிலில் சீட்டு போட்டு பார்க்கலாம் என்று முடிவு பண்ணிய மீனா, வேண்டாம் என்று வந்துவிட்டது.

இதனை அடுத்து ரோகிணி, ஸ்ருதி அம்மாவிடம் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் பணத்தில் ஒரு லட்ச ரூபாய் முருகனிடம் கொடுத்து விடுகிறார். இன்னொரு லட்ச ரூபாய் பணத்தை விஜயாவிடம் கொடுக்கிறார். அப்பொழுது விஜயா, யாரிடம் பணத்தை வாங்கினாய் என்று கேட்ட பொழுது வித்யா என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் மனோஜ் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்ற கோபம் ரோகினிக்கு இருக்கிறது. அடுத்ததாக முத்து மனசு மாறிய நிலையில் சீதா அருணுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் அப்பொழுது தான் தெரியப்போகிறது ஏற்கனவே இவர்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிவிட்டது என்று.

முக்கியமாக இவர்களுக்கு மீனா தலைமையில் தான் நடந்திருக்கிறது என்று முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. இதனால் முத்து மற்றும் மீனாவுக்கு இடையில் விரிசல் மட்டுமில்லாமல் இரண்டு பேரும் பிரிந்து இருக்கும் நிலைமையும் வரப்போகிறது. இதை பார்த்து ரோகினி சந்தோசத்தில் குளிர் காயப் போகிறார்.