Rajinikanth: பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் எப்போது அதிக பட்ஜெட்களில் எடுக்கப்படுவதற்கு காரணமே அவர்களுடைய சம்பளம்தான். 300 கோடி பட்ஜெட் போட்டு படம் எடுக்கிறார்கள் என்றால் அதில் பாதிக்கு பாதி அந்த ஹீரோவின் சம்பளத்திற்கே போய்விடும். அப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
விஜய்: நடிகர் விஜயின் கடைசி இரண்டு படங்களின் சம்பளத்தை ஒப்பிடும்போது தற்போது ரஜினியை விட இவர் தான் அதிக சம்பளம் வாங்குகிறார்.
ஜனநாயகன் படத்திற்கு 200-ல் இருந்து 250 கோடி இவருக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் தான் கேரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் போல.
ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்காக 150 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். இந்த நிலையில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கூலி படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் 200 கோடி என சொல்லப்படுகிறது.
அஜித்குமார்: 2 பத்து வருடத்திற்கு முன்பு அஜித்குமார் 105 கோடி சம்பளத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவருடைய சம்பளத்தை திடீரென உயர்த்தி விட்டார். தற்போதைய நிலவரப்படி அஜித்குமார் 160 கோடி சம்பளமாக பெறுகிறார்.
கமல்ஹாசன்: நடிகர் கமலஹாசனிற்கு மிகப் பெரிய லாபத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்த படம் விக்ரம். அதுவரை இரண்டு இலக்க எண்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கமலஹாசன் விக்ரம் படத்தில் இருந்து 100 கோடி சம்பளமாக பெறுகிறார்.
சூர்யா: சூர்யா இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் இல்லை என்பதால் அவரால் 100 கோடி சம்பளத்தை எட்ட முடியவில்லை. தற்போதைக்கு 60 கோடி சம்பளமாக பெறுகிறார்.
இந்த தகவல் கடந்த மே மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து நடிகர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தி, சிம்பு, விஷால், ஜெயம் ரவி, விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.