AR ரகுமான், மத்திய அமைச்சர் எல் முருகன் 1 மணி நேரம் சந்திப்பு.. மீனாவை சுற்றி சுழற்றி அடிக்கும் சர்ச்சை!

AR Rahman: மத்தியில் ஆளும் பாஜக கட்சி தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க மிகப்பெரிய முயற்சியை எடுத்து வருகிறது. திரை நட்சத்திரங்கள் நினைத்தால் தான் இது சாத்தியமாகும் என இன்னொரு புது ரூட்டையும் போட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே பாஜக கட்சியில் குஷ்பூ மற்றும் நமீதா இருப்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். இந்த நிலையில் தான் மீனாவுக்கு பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

மீனாவை சுற்றி சுழற்றி அடிக்கும் சர்ச்சை!

மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் மீனா கலந்து கொண்டதிலிருந்து அவர் பாஜகவில் முக்கிய பொறுப்புக்கு வருவார் என பேச்சுக்கள் வர ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் தான் மத்திய அமைச்சர் எல் முருகன் நேற்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை சந்தித்து பேசி இருக்கிறார்.

அதுவும் இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததால் பெரிய கவனத்தை பெற்றது. ஒரு வேலை ஏ ஆர் ரகுமானையும் பாஜக கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. இது குறித்த முதல் கட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட குறும்படம் சத்தியம் சிவம் சுந்தரம், இதற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறாராம். இதனால் தான் மரியாதை நிமித்தமாக இவர்கள் சந்திப்பு நேற்று இருந்திருக்கிறது.

இந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டாலும் மீனா பாஜகவில் இணைவது குறித்து அவருடைய தரப்பில் இன்னும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படாததால் அவரைச் சுற்றிய மர்மம் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது.