பல்லவனுக்காக அம்மாவையே வெளுத்து வாங்கும் நிலா.. சேரன் குடும்பத்துக்கு ஏற்ற மருமகள்

Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் குடும்பத்துடன் நிலா பிக்னிக் வந்திருக்கிறார். அதே இடத்திற்கு நிலாவின் அம்மா அப்பா அண்ணன் அண்ணி என அனைவரும் சேர்ந்து பிக்னிக் வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கிறது.

முக்கியமாக நிலாவின் அம்மா வாய்க்கு வந்தபடி ஓவராக பேசி அனைவரது முன்னாடியும் நிலாவை அவமானப்படுத்தி விடுகிறார். போதாதருக்கு சோழனை பார்க்கும் போதெல்லாம் நிலாவின் அண்ணன் வம்பு பண்ணுகிறார். கயிறு இழுக்கும் போட்டியில் சேரன் சோழன் குடும்பத்துடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அங்கே வந்த நிலாவின் அண்ணன், சோழனை தனியாக கயிறு இழுக்கும் போட்டிக்கு வர சொன்னார். அப்படி இரண்டு பேரும் போட்டியில் கலந்து கொண்டு கயிறை இழுக்கும் பொழுது தன்னுடைய மகன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நிலாவின் அப்பாவும் அந்த கயிறை இழுக்க ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்த பாண்டியன், அண்ணனுக்கு சப்போர்ட்டாக போய்விட்டார். பிறகு நிலாவின் அம்மா அண்ணி என இரண்டு பேரும் சேர்ந்து நிலாவின் அண்ணன் அப்பாவுக்கு சப்போர்ட்டாக கயிறு இழுக்க ஆரம்பித்தார்கள். உடனே சோழன் பாண்டியனுக்கு சப்போர்ட்டாக சேரன் பல்லவன் கயிறு இழுக்க ஆரம்பித்தார்கள்.

இதையெல்லாம் பார்த்த கடைசியில் நிலாவும் சோழனுக்கு சப்போர்ட்டாக நின்ற நிலையில் கடைசியில் நிலாவின் அண்ணன் தோற்றுப் போய் அப்பா கீழே விழுந்து விடுகிறார். இதனால் கோபத்துடன் அவர்கள் போய்விடுகிறார்கள். இதனை தொடர்ந்து நிலாவின் அண்ணன் குழந்தை தனியாக நின்று ஊஞ்சலாடும்பொழுது ஏற முடியாமல் தவித்தது.

இதைப் பார்த்த பல்லவன் அந்த குழந்தையை தூக்கி ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடுகிறார். உடனே நிலாவின் அம்மா வந்து அனைவரது முன்னாடியும் பிரச்சினை பண்ணி பல்லவன் அந்த குழந்தையை கடத்த வந்திருக்கிறான் என்று பொய்யாக சொல்லி அவமானமாக பேசுகிறார். இதை கேள்விப்பட்ட நிலா, பல்லவனுக்கு சப்போர்ட்டாக பேசி அம்மாவை வெளுத்து வாங்கும் அளவிற்கு லெப்ட் அண்ட் ரைட் கொடுக்கிறார்.

சேரன் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாகவும் தோழனுக்கு தகுந்த மனைவியாகவும் நிலா எல்லா இடங்களிலும் நடந்து கொள்கிறார். இதே மாதிரி சேரனுக்கும் ஒரு நல்ல மனைவி அமைந்தால் அந்த குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்துவிடும்.