வெற்றிமாறன் படத்தில் சிம்பு கேரக்டர் இதுதான்.. அடடே! படப்பிடிப்புக்கும் தேதி குறிச்சிட்டாங்களே

Simbu: நேற்று வரை சிம்பு- வெற்றிமாறன் கூட்டணியில் படம் வருமா என்ற சந்தேகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்தது. இன்று படம் உறுதியானதோடு, சிம்பு என்ன கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற அப்டேட் வெளியாகியிருக்கிறது.

வெற்றிமாறன் ஏற்கனவே வடசென்னை படத்தை சிம்புவை வைத்து எடுக்க பிளான் பண்ணி பின்னர் கதை தனுஷிடம் போனது. தற்போது வடசென்னையை சுற்றி நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்த தான் இந்த படத்தை சிம்புவை வைத்து பண்ண இருக்கிறார்.

சிம்பு கேரக்டர் இதுதான்

மேலும் இந்த படத்திற்கு ராஜன் வகையறா என்று தான் பெயர் வைக்கப்படும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை படத்தின் டைட்டில் உறுதியாகவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் அவர் இரண்டு கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார்.

அதில் ஒன்று ரொம்பவும் இள வயதான சிம்பு. அது மட்டும் இல்லாமல் வெற்றி மாறனிடம் சிம்பு நீங்கள் எந்த மாதிரியான கதையை எழுதினாலும் சரி என்னுடைய தலையீடு இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

இந்த படத்தின் ப்ரோமோசோம் ஏற்கனவே முடிந்துவிட்டது என சொல்லப்படுகிறது. படத்தின் டைட்டில் அனௌன்ஸ்மென்ட் வீடியோ விரைவில் படமாக்கப்படுகிறது. மேலும் வரும் ஜூலை 16ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →