படமே எடுக்கறாங்க, பணம் வாங்காம NOC குடுக்கிற.. 3 செகண்ட் வீடியோவுக்கு நா 10 கோடி தரணுமா.? ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நேற்று முழுவதும் தனுஷை சிம்பு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வச்சி செய்தனர். வெற்றிமாறன் படத்துக்காக இவர் 20 கோடி ராயல்டி கேட்டதாக ஒரு தகவல் அதிவேகமாக பரவியது.

வலைப்பேச்சு சேனலில் கூட இது குறித்து பேசி இருந்தனர். உடனே சிம்பு ரசிகர்கள் களத்தில் குதித்து தனுஷை கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் இன்று வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தனுஷ் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. உடனே தடையில்லா சான்று கொடுக்க சம்மதித்து விட்டார். ஆனால் தேவையில்லாமல் இப்படி செய்திகள் வருவது கஷ்டமாக இருக்கு என்று சொன்னார்.

இது தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில் இப்படி ஒரு வேலையை பார்த்தது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தான் என ஒரு பக்கம் அவரையும் தனுஷ் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் வெற்றிமாறனை கட்டாயப்படுத்தி இப்படி பேச வச்சிருக்காங்க என சிலர் மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ தனுஷ் பணம் கேட்கவில்லை என்ற செய்தி மட்டும் உறுதியாகிவிட்டது.

இது யாருக்கு கஷ்டமாக இருக்கோ இல்லையோ நயன்தாராவுக்கு நிச்சயம் இருக்கும். ஏனென்றால் மூணு செகண்ட் வீடியோவுக்காக 10 கோடி காசு கேட்டு தனுஷ் அவர் மேல் வழக்கு போட்டிருக்கிறார்.

ஆனால் இங்கு முழு படமே வரப்போகுது. அங்க மட்டும் பணம் வாங்காமல் NOC குடுக்கிறார். அப்படி என்றால் நயனுக்கு இது கொஞ்சம் காண்டாக தான் இருக்கும்.

இப்படி சில மீம்ஸ் பரவி வரும் நிலையில் ஜெயம் ரவி நான் வாடகை வீட்ல இருக்கேன் என 3bhk பட விழாவில் பேசினார். அதையும் ஒரு பக்கம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →